AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இணையத்தில் வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரீசென்ட் லுக்!

Sivakarthikeyans Recent Photos Viral On Social Media | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரீசென்ட் லுக்!
சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Aug 2026 13:02 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் பெரும்பாலான படங்கள் வெற்றியைப் பெற்ற நிலையில் சிலப் படங்கள் தோல்வியையும் சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி பாடகர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் அவரது மற்ற செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் மட்டும் இல்லாமல் இவரது தயாரிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சேயோன்.

இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் ரீசென்ட் லுக்:

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி வரும் இந்த சேயோன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மலை உச்சியில் ஜீப் மீது நின்றுகொண்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது சேயோன் படத்தின் லுக் என்று ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

Also Read… சார்பாட்ட 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் – நடிகை துஷாரா விஜயன் கொடுத்த அப்டேட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சூப்பர் ஸ்டார் கொடுத்த ஆன்மிக புத்தகம்.. நெகிழ்ச்சியாக வீடியோவை பகிர்ந்த நடிகை ராஷி கண்ணா!

Follow Us