AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிவகார்த்திகேயன் 26 படத்தின் நாயகி இவரா? வைரலாகும் தகவல்

Sivakarthikeyan 26 Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள 26-வது படத்தில் அவருக்கு நாயகியாக யார் நடிக்க உள்ளார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயன் 26 படத்தின் நாயகி இவரா? வைரலாகும் தகவல்
சிவகார்த்திகேயன்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Feb 2026 14:52 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான பராசக்தி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி வைப்பார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. ஏன் என்றால் பராசக்தி படத்திற்கு முன்னதாகவே வெங்கட் பிரபு உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தப் படத்தின் பணிகள் தற்போது தொடங்காது என்றும் அதற்கு பதிலாக நடிகர் சிவகார்திகேயன் சிவகுமார் முருகேசன் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகி உள்ள தாய் கிழவி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலமாக சிவகுமார் முருகேசன் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகின்ற 20-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு சிவகார்த்திகேயனின் 26-வது படத்தை இயக்க உள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் 26 படத்தின் நாயகி இவரா?

தொடர்ந்து சிவகார்த்திகேயன் 26 படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக தமிழ் சினிமாவில் நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து காந்தா என்ற படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கபப்டுகின்றது.

Also Read… ரீ ரிலீஸாகும் உயிருள்ளவரை உஷா… சிம்பு வெளியிட்ட வாழ்த்துப் பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணியின் நிஜ கணவர் இவரா? வைரலாகும் போட்டோ

Follow Us