AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரவி மோகன் வந்தபிறகு என் வாழ்க்கையே மாறியது – பாடகி கெனிஷா எமோஷனல் பதிவு!

Kenishaa Francis Emotional Post: பிரபல பாடகி மற்றும் ரவி மோகனின் தோழியாக இருந்துவருபவர் கெனிஷா பிரான்சிஸ். இவரை குறித்து தொடர்ச்சியாக ஊடகங்களில் பேசப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்ட கெனிஷா, ரவி மோகன் வந்த பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

ரவி மோகன் வந்தபிறகு என் வாழ்க்கையே மாறியது – பாடகி கெனிஷா எமோஷனல் பதிவு!
ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 Feb 2026 12:53 PM IST

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரவி மோகன் (Ravi Mohan). இவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இப்படத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஹீரோவாக நடிக்க, அவருக்கு எதிரான வில்லன் வேடத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்நிலையில் நடிகர் ரவி மோகன் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே தனது மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் சமீபகாலமாக அவரின் தோழியும், பாடகியான கெனிஷாபிரான்சிஸ் (kenishaa francis) உடன் நெருக்கமாக பழகிவருவதாக வட்டாரங்களில் தகவல்கள் பரவிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ரவி மோகன் குறித்து கெனிஷா பிரான்சிஸ் வெளியிட்ட பதிவு வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: மை லார்ட் படத்தின் விநியோக உரிமையைப் பெற்றது 2D என்டர்டெயின்மென்ட்!

ரவி மோகன் குறித்து எமோஷனலாக கெனிஷா பிரான்சிஸ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Keneeshaa (@keneeshaa1)

அந்த பதிவில் பாடகி கெனிஷா பிரான்சிஸ், நான் வளரும்போது, புறக்கணிப்பு, முன்னுரிமை இல்லாதவராக உணரவைக்கப்பட்டேன். நான் என்னை தவறாக புரிந்துகொண்டு, நான் எப்போதும் விரும்பியதெல்லாம் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான். நான் முழுமையாக, மன்னிப்பு கேட்காமல் எனக்காகக் காட்டத் தேர்ந்தெடுத்த நாள், உலகம் என்னை அங்கு சந்திக்கத் தேர்ந்தெடுத்த நாள், மரியாதை, தெளிவு மற்றும் ஏராளமான ஆசீர்வாதங்களைத் திருப்பித் தந்தது. மேலும் எனது அன்புள்ள ரவி மோகன் எல்லாவற்றையும் மாற்றியமைத்தார். எங்கள், செயல்கள், காதல், வாழ்கை மற்றும் எனது பார்வை போன்றவற்றையும் மாற்றியமைத்தார்.

இதையும் படிங்க: எங்க இருந்த இவ்வளவு நாள்?.. அனஸ்வரா ராஜனை பாராட்டிய ரஜினிகாந்த்!

சிலர் அதை வித்தியாசமாகப் பார்க்கத் தேர்வு செய்யலாம், ஆனால் நெருக்கமாகப் பார்ப்பவர்கள் உண்மை, தூய்மை மற்றும் நாம் பகிர்ந்து கொள்ளும் அமைதியைப் பார்க்கிறார்கள். நான் என் இருண்ட போர்களை எதிர்கொண்டபோது நீங்கள் என் பக்கத்தில் நின்றீர்கள், ஒவ்வொரு வெற்றியையும் அது உங்களுடையது போல் கொண்டாடினீர்கள். அதற்காகவும், இன்னும் பலவற்றிற்காகவும், நன்றி” என அந்த பதிவில் அவர் எமோஷனலாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow Us