Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மை லார்ட் படத்தின் விநியோக உரிமையைப் பெற்றது 2D என்டர்டெயின்மென்ட்!

My Lord Movie Update: தமிழ் சினிமாவில் மக்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் சசிகுமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் மை லார்ட்.

மை லார்ட் படத்தின் விநியோக உரிமையைப் பெற்றது 2D என்டர்டெயின்மென்ட்!
மை லார்ட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Feb 2026 19:32 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார் சசிகுமார். முன்னதாக நடிகராக அறிமுகம் ஆன போது கிராமத்து கதைகளையும் ஜாலியான கதைகளையும் மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கியது. இந்த நிலையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இலங்கையில் இருந்து வறுமை காரணமாக தமிழ் நாட்டிற்கு வரும் ஒரு குடும்பத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருந்தது. மிகவும் வலி மிகுந்த கதையை மக்களுக்கு எளிய வகையில் புரியும் விதமாக எடுத்ததன் காரணமாக படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான படம் ஃப்ரீடம். இந்தப் படத்திலும் இலங்கையை மையமாக வைத்தே கதை எழுப்பட்டு இருந்தாலும் மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது என்பது ட்ரெய்லரைப் பார்க்கும் போதே தெரிந்தது. மேலும் இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகாமல் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி உள்ள படம் மை லார்ட்.

மை லார்ட் பட விநியோக உரிமையைப் பெற்றது 2D என்டர்டெயின்மென்ட்:

இந்த மை லார்ட் படத்தை இயக்குநர் ராஜு முருகன் எழுதி இயக்கி உள்ளார். படத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை சைத்ரா ஜே ஆச்சார் நாயகியாக நடித்துள்ளார். படம் வருகின்ற 13-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த மை லார்ட் படத்தை தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் விநியோகிக்க உள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… ரீ ரிலீஸாகும் மௌனம் பேசியதே படம்… நாஸ்டாலஜியை பகிர்ந்த நடிகை லைலா

2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… காதலா? கெரியரா? நீங்க எதை தேர்ந்தெடுப்பீங்க… முதல் நீ முடிவும் நீ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?