Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக ரீ-ரிலீஸாகும் காதலர் தினம் படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

Kadhalar Dhinam Movie Re Release Update: தமிழ் சினிமாவில் வருகின்ற காதலர் தினத்தை முன்னிட்டிப் பலப் படங்கள் ரீ ரிலீஸ் ஆவதாக தொடர்ந்து படக்குழு அறிவித்து வருகின்றது. அந்த வரிசையில் காதலர் தினத்தை முன்னிட்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற காதலர் தினம் படம் ரீ ரிலீஸாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக ரீ-ரிலீஸாகும் காதலர் தினம் படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்!
காதலர் தினம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Feb 2026 14:27 PM IST

தமிழ் சினிமாவில் வருகின்ற 14-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் கதைகளில் முன்னதாக வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற காதலர் தினம் படம் வருகின்ற காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த ஜூலை மாதம் 09-ம் தேதி 1999-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் காதலர் தினம். இயக்குநர் கதிர் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் குணால் நாயகனாகவும் நடிகை சோனாலி பிந்த்ரே நாயகியாகவும் நடித்து இருந்தனர். ரோம் காம் பாணியில் உருவாகி இருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் நாசர், கவுண்டமணி, சின்னி ஜெயந்த், மணிவண்ணன், பெரியார் தாசன், கல்பனா ஐயர், ராகசுதா, அரவிந்த் கதரே, கோவை செந்தில், ரம்பா, மோகன் வைத்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் மாபெரும் வரவேறபைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 14-ம் தேதி ரீ ரிலீஸாகும் காதலர் தினம் படம்:

வறுமை மட்டுமே பார்த்த குடும்பத்தில் பிறந்த குணால் படித்தால் எப்படியாவது முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் போது அவரது குடிகார தந்தை படிப்பை நிறுத்திவிட்டு கணக்கு எழுதும் வேலைக்கு செல்ல சொல்கிறார். ஆனால் குணாலின் அம்மா அவரை எப்படியாவது டிகிரி படிக்க வைக்க வேண்டும் என்று தனது கணவரிடம் போராடி மகனை மும்பைக்கு அனுப்பி வைக்கிறார். மும்பையில் வந்து இறங்கிய குணாலுக்கு எங்கு செல்வது எப்படி கல்லூரியில் சேர்வது பணம் இல்லாமல் என்று திகைத்து நின்ற போது அவருக்கு உதவ வந்த ஏஞ்சல் மாதிரி நாசர் எண்ட்ரி கொடுக்கிறார்.

நாசர் தனது கல்லூரியிலேயே குணாலுக்கு படிக்க இடம் தருகிறார். படிக்க சென்ற இடத்தில் காதலில் விழும் குணாலுக்கு ஒரு நண்பனாகவும் உதவி செய்கிறார் நாசர். இறுதியில் தான் காதலிப்பது தனக்கு கடவுள் போல உதவிய நாசரின் மகள் என்று தெரிந்ததும் அந்த காதலைவிட்டு விலக முடிவு செய்கிறார் குணால். இறுதியில் குணாலின் காதல் எப்படி கைக்கூடியது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது வருகின்ற 14-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது ரவி மோகனின் தீபாவளி படம்!

படக்குழு வெளியிட்ட ரீ ரிலீஸ் ட்ரெய்லர்:

Also Read… ஜீ 5 ஓடிடியில் வெளியான பராசக்தி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ