Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் தொடங்கியது சூர்யா 47 படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்

Suriya 47 Movie Shooting Update: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது மற்ற மொழி இயக்குநர்களின் இயக்கத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 47-வது படத்திற்காக கமிட்டாகி நடித்து வருகிறார்.

சென்னையில் தொடங்கியது சூர்யா 47 படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்
சூரியா 47Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Feb 2026 10:17 AM IST

கோலிவுட் சினிமாவில் சுமார் 29 வருடங்களாக நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் சூர்யா (Actor Suriya). இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். தொடர்ந்து அடுத்தடுத்து தனது நடிப்பி திறமையை மெருகேற்றி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தொடர்ந்து நடிப்புத் துறையில் முன்னணி நாயகன் என்ற அந்தஸ்தையும் பெற்றார். படங்களில் நடிப்பதால் மட்டும் இன்றி சமூகத்தில் மக்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடிகர் சூர்யா முயற்சித்து வருகிறார். இதன் காரணமாகவே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம். ஒரு படத்திற்கான தனது உடல் அமைப்பை மாற்றி அமைத்து தனது சினிமா ரசிகர்களை மட்டும் இன்றி பிரபலங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நடிகர் சூர்யா நடிப்பில் ரெட்ரோ படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த 2026-ம் ஆண்டுல் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளடு.

அதன்படி சூர்யாவின் 45-வது படமான கருப்பு மற்றும் சூர்யா 46 ஆகியப் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படங்களின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படத்தின் வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தனது 47-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் நடிகர் சூர்யா.

சென்னையில் தொடங்கியது சூர்யா 47 படத்தின் ஷூட்டிங்:

இந்த நிலையில் இந்த சூர்யா 47 படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். முன்னதாக படத்தின் படப்பிடிப்புகள் கேரளாவில் தொடங்கி நடைப்பெற்று வந்தது. ஆனால் அங்கு ஷூட்டிங் நடத்துவதற்கான உரிய அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்ததால் சென்னையில் ஷூட்டிங் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தற்போது சென்னையில் சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Also Read… மகளுக்காக பழி வாங்கும் சரத்குமார்… வைரலாகும் சரத்குமாரின் ஆழி படத்தின் டீசர் 

இணையத்தில் வைராலும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அனிமல் பார்க் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் – இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஓபன் டாக்