அனிமல் பார்க் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் – இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஓபன் டாக்
Sandeep Reddy Vanga about Animal Park Shooting: தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அனிமல் படத்தின் தொடர்ச்சியான அனிமல் பார்க் படத்தின் ஷூட்டிங் எப்போது என்பது குறித்து அப்டேட் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் சினிமாவில் இயக்குநராக பணியாற்றுவதற்கு முன்பு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நாயகனகா நடித்து இருந்தார். இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இதுவரை அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கான கபீர் சிங், மற்றும் அனிமல் ஆகியப் படங்களை இயக்கி உள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது இவரது இயக்கத்தில் ஸ்பிரிட் படம் உருவாகி வருகின்ற நிலையில் விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் சமீபத்தில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அனிமல் பார்க் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்:
‘அனிமல்’ படத்தின் தொடர்ச்சியான ‘அனிமல் பார்க்’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டின் மத்தியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அது ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரண்டு சகோதரர்களுக்கு இடையேயான ஒரு முழுமையான போரைச் சுற்றி அமையும் என்றும் சந்தீப் ரெட்டி வங்கா உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது தற்போதைய படமான ஸ்பிரிட் படத்தை முடித்த பிறகு இந்தப் படம் தொடங்கும் என்று தெரிவித்த அவர், படத்தின் தலைப்பு கதையின் விரிவடைந்த பரிமாணத்தைப் பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read… தனுஷ் 55 படத்தில் இணைந்த நடிகர் மம்முட்டி… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
– #SandeepReddyVanga has confirmed that #AnimalPark, the sequel to Animal, will go on floors in mid-2027 and will revolve around an all-out war between two identical brothers.
– He revealed that the film will begin after he completes his current project and explained that the… pic.twitter.com/2oy3uHf7a6
— Movie Tamil (@_MovieTamil) February 5, 2026
Also Read… வாரணாசி படத்தின் கதைக்கரு இதுதானா? இணையத்தில் வைரலாகும் தகவல்