Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாரணாசி படத்தின் கதைக்கரு இதுதானா? இணையத்தில் வைரலாகும் தகவல்

Mahesh Babu Varanasi Movie Plot: பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படத்தின் ப்ளாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வாரணாசி படத்தின் கதைக்கரு இதுதானா? இணையத்தில் வைரலாகும் தகவல்
வாரணாசிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Feb 2026 13:57 PM IST

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி பாகம் 1 மற்றும் பாகுபலி பாகம் இரண்டு ஆகியப் படங்கள் ரஜமௌலியை உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களை தொடர்ந்து ராஜமௌலி மீது மொத்த உலக சினிமா பார்வையும் விழத் தொடங்கியது. மேலும் அந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணை வைத்து இயக்குநர் ராஜமௌலில் இயக்கதிய ஆர்ஆர்ஆர் படமும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இதன் காரணமாக ராஜமௌலி அடுத்து எந்தப் படத்தை யாரை வைத்து இயக்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் 29-வது படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்திற்கு வாரணாசி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படக்குழுவினர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியது மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் வாரணாசி படத்தின் கதைக்கரு என்று ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வாரணாசி படத்தின் கதைக்கரு இதுதானா?

சிவபெருமானின் தீவிர பக்தனான ருத்ரா (மகேஷ் பாபு), காலத்தையே கடந்து செல்லும் ஒரு இரகசியப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறான். வெவ்வேறு காலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு சக்திவாய்ந்த பழங்கால அண்டப் பொருளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் ருத்ரா, அது தவறானவர்களின் கைகளில் சிக்கிவிடாமல் தடுக்க, வெவ்வேறு காலகட்டங்களுக்குப் பயணிக்கிறான்.

ஆனால், அவன் தனியாக இல்லை என்பதை உணரும்போது அவனது பயணம் ஒரு ஆபத்தான திருப்பத்தை அடைகிறது. முழுமையான உலக ஆதிக்கத்திற்கான தாகத்தால் உந்தப்பட்ட ஒரு இரக்கமற்ற சூத்திரதாரி, அதே பொருளைத் துரத்திக்கொண்டிருக்கிறான். காலக்கோடுகள் மோதி, யதார்த்தம் சிதையத் தொடங்கும் நிலையில், மீளமுடியாத குழப்பம் ஏற்படுவதற்கு முன்பு, ருத்ரா தனது எதிரியைத் தோற்கடித்து பிரபஞ்சத்தின் சமநிலையைப் பாதுகாக்க வேண்டும் என்பதே கதைக்கரு என்று தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Also Read… திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்த பராசக்தி படம் – போஸ்டர் வெளியிட்டு கொண்டடும் படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் கவனம் பெறும் காதல் கதை சொல்லவா படத்தின் ட்ரெய்லர்