வெற்றிநடைபோடும் விஸ்வநாத் & சன்ஸ்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்
Vishwanath and Sons movie poster | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், இந்தப் படத்தின் புது போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதன்படி நடிகை மமிதா பைஜூ படத்தின் நாயகியாக நடித்து உள்ள நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் நாயகன் சூர்யாவின் அம்மாவாக நடித்து இருந்தார். இவர்கள் இருவரின் காட்சிகள் ரசிகர்களிடியே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வெற்றிநடைபோடும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்:
படம் திரையரங்குகளில் வெளியான இரண்டு நாட்களிலேயே உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகமாக அதிகரித்து உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு தற்போது வெற்றியைக் கொண்டாடும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… 2 ஆண்டுகளைக் கடந்தது விக்ரமின் தங்கலான் படம் – வீடியோ வெளியிட்ட படக்குழு
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
THE ONE & his supremacy ramped up the box office 💥💥#VishwanathAndSons registers a sensational 311.33K+ tickets booked on Sunday on @BookMyShow ❤️🔥#BlockbusterVAS#BlockbusterVishwanathAndSons @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash… pic.twitter.com/FDB1ntxJnC
— Sithara Entertainments (@SitharaEnts) August 17, 2026
Also Read… விக்ரமின் சியான்63 பட பாடல் ஷூட்டிங் காட்சி இணையத்தில் லீக் – அதிர்ச்சியில் படக்குழு!



