2 ஆண்டுகளைக் கடந்தது விக்ரமின் தங்கலான் படம் – வீடியோ வெளியிட்ட படக்குழு
Thangalaan movie team celebrates 2 years | தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற தங்கலான் படம் இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழு கொண்டாடி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தங்கலான். ஆக்ஷன் அட்வெஞ்சர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சியான் விக்ரம் (Actor Chiyaan Vikram) நாயகனாக நடித்து இருந்தார். நடிகர் சியான் விக்ரம் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் உடல் எடை மட்டும் இன்றி தனது தோற்றத்தையும் அந்தப் படத்திற்கு ஏற்றார் போல மாற்றுவது வழக்கம். அந்த வரிசையில் இந்தப் படத்தில் அவர் தனது உடல் எடையை மாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சியான் விக்ரமின் கதாப்பாத்திரத்தைப் ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டகிரோன், ஆனந்தசாமி, வேட்டை முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், லாக்கப் சந்திரகுமார், அர்ஜுன் பிரபாகரன், கிரிஷ் ஹாசன், ப்ரீத்தி கரண், பூர்வ தரணி, பென், இஷான் மற்றும் சம்பத் ராம் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.




2 ஆண்டுகளைக் கடந்தது விக்ரமின் தங்கலான் படம்:
படம் 1980-களில் நடப்பது போல காட்டப்படுகின்றது. இந்தப் படத்தில் ஒதுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வரும் விக்ரமின் மக்கள் சில வெளிநாட்டுக்காரர்களால் தங்கம் எடுப்பதற்காக அழைத்து செல்லப்படுகிறார்கள். அந்த இடத்தில் விக்ரமின் ஆட்களுக்கு பல துண்பங்கல் ஏற்படுகின்றது. அதில் இருந்து அவர்கள் எல்லாம் எப்படி தப்பிக்கிறார்கள் மற்றும் அந்த தங்கம் இருக்கும் இடத்திற்கும் விக்ரமிற்கும் உள்ள ஒரு பூர்வ ஜென்ம கனெக்ஷன் என இந்தப் படம் நீண்டு கொண்டு இருந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு இதனை கொண்டாடி வருகின்றனர்.
Also Read… பிக் பாஸ் தமிழின் 10வது ஆண்டு.. டாப் 10 வைரல் தருணங்களை வீடியோவாக வெளியீடு!
தங்கலான் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A world of its own, a story that stays with you. 🔥
Two years of Thangalaan#2YearsOfThangalaan pic.twitter.com/xpdSmo6nbd
— Neelam Productions (@officialneelam) August 15, 2026
Also Read… Ajith Kumar: டேர் டெவில் படத்திற்காக.. மாஸாக ஒர்கவுட் செய்யும் அஜித் – வைரலாகும் வீடியோ!