AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக் பாஸ் தமிழின் 10வது ஆண்டு.. டாப் 10 வைரல் தருணங்களை வீடியோவாக வெளியீடு!

10 Viral Moments of Bigg Boss: விஜய் டிவியில் வெளியாகி மக்களை கவர்ந்துவரும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சியானது கடந்த 2017ம் ஆண்டில் தொடங்கிய நிலையில், 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதை முன்னிட்டு, பிக் பாஸ் தமிழில் நடந்த டாப் 10 வைரல் தருணங்களை ஒரே வீடியோவாக பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் தமிழின் 10வது ஆண்டு.. டாப் 10 வைரல் தருணங்களை வீடியோவாக வெளியீடு!
பிக் பாஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Aug 2026 17:10 PM IST

தமிழ் சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருவது விஜய் டிவி (Vijay TV). இந்த தொலைக்காட்சி சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக பெயர்போனது. இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ, அதைவிடவும் ஒரு படி மேலாக ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். அதில் டாப் 1 டிஆர்பி ரேட்டிங் கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil). இந்த நிகழ்ச்சியானது ஸ்டார் விஜய் குழுமங்களின் அனைத்து மொழிகளிலும் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தமிழில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுக்க ஆரம்பித்த நிலையில், கிட்டத்தட்ட 7 சீசன்கள் வரை அதில் பணியாற்றியிருந்தார்.

மேலும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முதல் விஜய் சேதுபதி தொகுக்க தொடங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 10 வது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் நிலையில், இதுவரை 9 சீசன்களில் நடந்த வைரல் தருணங்களை பிக் பாஸ் குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ரிலீஸ்.. திருப்பதியில் மொட்டையடித்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன் 9 வரை உள்ள டாப் 10 வைரல் தருணங்களை ஒரே வீடியோவாக வெளியிட்ட பிக் பாஸ் குழு:

இந்த வீடியோவில், சீசன் 1ல் நடந்த கஞ்சா கருப்பு மற்றும் ஓவியாவின் சண்டை, சீசன் 2ல் சென்ட்ராயன் மனைவியின் கர்ப்பம், சீசன் 3ல் நடந்த முகின் அபிராமியின் சண்டை, சீசன் 7ல் நடந்த பிரதீப் ஆண்டனியின் சண்டை, சீசன் 6ல் ஜனனி மற்றும் ஜி.பி. முத்துவின் டாஸ்க், சீசன் 5ல் உள்ள ராஜூ ஜெயமோகன் மற்றும் சரத்தின் பேச்சு, சீசன் 3ல் பிரதீப் ஆண்டனி மற்றும் கவினின் சண்டை, சீசன் 9ல் நடந்த பார்வதி மற்றும் கம்ருத்தீனின் ரெட் கார்டு, சீசன் 8ல் நடந்த சௌந்தர்யாவின் வாக்குவாதம், சீசன் 4ல் அனிதா சம்பத்தின் பேச்சு மறுக்கப்பட்டது போன்ற வைரல் தருணங்களின் ரீவைண்டாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரு சில சலுகை எல்லாம் இந்த புது மாப்பிள்ளைக்குதான் கிடைக்கும்… கலகலப்பாக வெளியானது மொத ராத்திரி பட ட்ரெய்லர்!

பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சி:

பிக் பாஸ் சீசன் 10 இந்த் 2026ம் ஆண்டில் தொடங்கவுள்ளது. அதற்கு முந்தைய நிகழ்ச்சியாக பிக் பாஸ் – தி காமன் மேன் என்ற புது நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சாதாரண மக்கள் கலந்துகொண்டு அவர்களும் பிக் பாஸ் சீசன் 10 குள்ளே நுழையலாம். அதற்கு தி காமன் மேன் நிகழ்ச்சியில் வெல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரி அர்ஜுனா, ஓவியா மற்றும் ராஜு ஜெயமோகன் மூவரும் நடுவார்களாகவும் மற்றும் மாயா கிருஷ்ணன் தொகுப்பாளராகவும் இருக்கிறார். இந்த நிகழ்ச்சி 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us