அதிக செல்போன் பயன்பாடு.. நடிகை ஷகிலாவிற்கு அறுவை சிகிச்சை
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக உள்ளவர் நடிகை ஷகிலா. இவர் சமீபத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படு இருந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைப்பெற்றதாகவும் அதற்கு என்ன காரணம் என்ற செய்தியும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஷகிலா. இவர் குடும்பத்தின் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். நடிகை ஷகிலா சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலக்கத்தில் அதிக அளவில் கவர்ச்சியான காட்சிகளிலேயே நடிக்க வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஷகிலா என்றாலே அப்படியா படங்கள் நடிப்பவர் என்ற முத்திரை குத்தப்பட்டத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஷகீலா சின்னத்திரையில் ஒரு சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட போது அந்த நிகழ்ச்சியில் உள்ளவர்கள் அவரை அம்மா அம்மா என்று அழைத்த பிறகு அவர் மீதான எண்ணம் மக்களிடையே மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போது அதிக அளவில் ஷகீலா சின்னத்திரையில் காணப்பட்டு வருகின்றார்.
நடிகை ஷகீலா பொது விவகாரங்கள் குறித்தும் தொடர்ந்து பேசி இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நெக் பேண்ட் உடன் அவர் மறுத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருக்கு என்ன நடந்தது என்ற கேள்வியையும் எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.




நடிகை ஷகிலாவிற்கு அறுவை சிகிச்சை:
அதனைத் தொடர்ந்து வெளியான தகவலின்படி நடிகை ஷகிலா நீண்ட நேரம் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட கடுமையான நரம்பு பாதிப்பு காரணமாக சமீபத்தில் கழுத்து அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். படுக்கையில் ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி மணிக்கணக்கில் கேம்ஸ் விளையாடியதும், ‘ரீல்ஸ்’ (reels) போன்ற காணொளிகளைப் பார்த்ததுமே தனது உடல்நிலையைப் பெரிதும் பாதித்ததாக அவர் தெரிவித்தார். கடுமையான உடல் வலியை அனுபவித்ததோடு மட்டுமல்லாமல், இதற்கான சிகிச்சைக்கு அவருக்கு சுமார் ₹3 லட்சம் செலவானது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், மொபைல் போன் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறும், குழந்தைகளை அதிக நேரம் திரையைப் பார்ப்பதிலிருந்து விலக்கி வைக்குமாறும் கேட்டுக்கொண்டார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… இந்த வயதில் எதுக்கு இத்தனை நாடகம்… வைரலாகும் த்ரிஷா கிருஷ்ணனின் இன்ஸ்டா பதிவு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Veteran actress #Shakeela recently underwent neck surgery after suffering severe nerve damage, which she attributed to prolonged smartphone use. She revealed that spending hours lying sideways in bed while playing games and watching reels seriously affected her health. The… pic.twitter.com/ugR8SepoIV
— Harish M (@chnmharish) August 13, 2026
Also Read… கலகலப்பாக வெளியானது பியார் பிரேமா கல்யாணம் படத்தின் ட்ரெய்லர்