விஜய் சேதுபதியின் 56-வது படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அட்லி – வைரலாகும் பதிவு!
Vijay Sethupathis 56th Movie Name Is Baththa | பான் இந்திய மொழிகளில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது 56-வது படத்தின் தலைப்பு பத்தா என்பதை போஸ்டர் வெளியிட்டு அட்லி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டு அடுத்தடுத்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் அடுத்தடுத்து தெலுங்கு, மலையளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து அடுத்தடுத்துப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கேமியோ வேடத்தில் நடித்து வந்த நடிகர் விஜய் சேதுபதி இனி அந்த மாதிரி நடிக்கப் போவதில்லை என பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
மேலும் இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் 56-வது படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநர் அட்லி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




விஜய் சேதுபதியின் 56-வது படத்தின் போஸ்டரை வெளியிட்ட அட்லி:
அதன்படி நடிகர் விஜய் சேதுபதியின் 56-வது படத்திற்கு பத்தா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இவர்களின் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சீதாகாதி ஆகியப் படங்கள் வெளியாகி இருந்தது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… நான் முதன்முதாலாக பார்த்த சூர்யா சார் படம் அதுதான் – நடிகை மமிதா பைஜூ ஓபன் டாக்
இயக்குநர் அட்லீ வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
K-town history la nadula konjam pakkatha skip pannama paatha…
You know it’s going to be a banger when this combo reunites for the third time 🔥#Baththa will meet you on October 1st ❤️#VJSxBalajiCombo#BaththaFromOct1
Makkal Selvan @VijaySethuOffl #BalajiTharaneetharan… pic.twitter.com/ETJo60SzcL
— atlee (@Atlee_dir) August 12, 2026
Also Read… அருண்ராஜா காமராஜுடனான கூட்டணி முறிவை உறுதி செய்த விஷ்ணு விஷால் – வைரலாகும் போஸ்ட்!