நடிகர் விஷாலின் மகுடம் படத்தின் ஒன் லைன் இதுதானா? வைரலாகும் அப்டேட்
Magudam movie synopsis is viral on social media | நடிகர் விஷால் எழுதி இயக்கி தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் மகுடம். இந்தப் படத்தின் ஒன் லைன் என்ன என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நாயகனாகவும் தாயரிப்பாளராகவும், பாடகராகவும் வலம் வந்தவர் விஷால். இவர் தற்போதுட் தமிழ் சினிமாவில் புது அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி நடிகர் விஷால் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநர் என்ற புது அவதாரத்தை எடுத்துள்ளார். இவர் முன்னதாக துப்பரிவாளன் 2 என்ற படத்தை எழுதி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்தப் படத்தை அவர் இறுதிவரை எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து விஷால் மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் விஷால் நடிப்பில் 35-வதாக உருவாகும் படம் தொடர்பான அப்டேட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மேலும் அந்தப் படத்தை இயக்குநர் ரவி அரசு எழுதி இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைப்பெற்று வந்த நிலையில் சினிமா வட்டாரங்களில் ஒரு தகவல் பரவியது.
அதன்படி அந்தப் படத்தினை இயக்குவதில் இருந்து ரவி அரசு விலகியதாகவும் நடிகர் விஷாலே அந்தப் படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ரவி அரசு ஒரு பக்கம் மறுக்க மற்றொரு பக்கம் படத்தின் டைட்ட்டில் மற்றும் அடுத்ததடுத்த அப்டேட்களில் இயக்குநர் என்ற இடத்தில் விஷாலின் பெயர் இடம்பெற்று வந்தது. அதன்படி மகுடம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




நடிகர் விஷாலின் மகுடம் படத்தின் ஒன் லைன் இதுதானா?
இந்த நிலையில் படத்தின் ஒன் லைன் என்ன என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி சென்னையில் ஒரு எளிய மருத்துவப் பிரதிநிதி தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். பிரிந்து சென்ற அவரது தந்தையின் கடந்த காலச் செயல்களால், ஒரு மகிழ்ச்சியான குடும்பப் பயணம் துயரமாக மாறுகிறது. துக்கமும் பழைய காயங்களும், மீட்சிக்கும் பழிவாங்குதலுக்கும் இடையே ஒரு தேர்வைத் தேர்ந்தெடுக்க அவரைத் தூண்டுகின்றன. இதுதான் மகுடம் படத்தின் கதை என்று தகவல்கள் வைரலாகி வருகின்றது.
Also Read… ஸ்கூல் படிக்கும் போது… சூர்யா குறித்த நினைவுகளை பகிர்ந்த மமிதா பைஜூ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Magudam
Synopsis – A humble medical representative in Chennai lives with his wife and two kids. A happy family trip turns tragic due to his estranged father’s past. Grief and old wounds force a choice between redemption and revenge.#Vishal in dual action ✌️and looks… pic.twitter.com/5LqTofRkwm— Movies Singapore (@MoviesSingapore) August 9, 2026