வெளியீட்டிற்கு 5 நாட்களே உள்ளது… விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு வெளியிட்ட புது போஸ்டர்!
Viswanath And Sons film crew released a new poster | நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். நடிகர் சூர்யாவின் அம்மாவாக நடிகை ராதிகா சரத்குமார் நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் அனில் கபூர் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு வெளியிட்ட புது போஸ்டர்:
தொடர்ந்து படத்தில் இருந்து அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. மேலும் வரிசையாக இசையமைப்பாலர் ஜிவி பிரகாஷின் இசையில் உருவான பாடல்களும் வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் படக்குழு தற்போது புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Toxic: அப்பா மகனின் ரிவெஞ்ச்.. யாஷின் டாக்ஸிக் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Just 5 DAYS until this family becomes yours ❤️
Come home to a beautiful story of love, laughter and togetherness, made to give you a magical experience 🫶🏻#VishwanathAndSons in cinemas worldwide on August 14th.#VASonAUG14th @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju… pic.twitter.com/SgvWwFtzeZ
— Sithara Entertainments (@SitharaEnts) August 9, 2026
Also Read… சேயோன் படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்? வைரலாகும் தகவல்



