AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கவின் – நயன்தாராவின் ஹாய் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது

Hi Movie Release Postponed | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர் கவின் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஹாய். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

கவின் – நயன்தாராவின் ஹாய் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது
ஹாய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Aug 2026 10:57 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா. நடிகர் கவின் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகை நயன்தாரா கவின் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே முன்னணி நடிகையாக பல உச்ச நடிகர்களுக்கு தொடர்ந்து ஜோடியாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நயன்தாரா பல நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் தற்போது நாயகன் – நாயகி என்று உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை நயன்தாரா இறுதியாக தெலுங்கு சினிமாவில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக படத்தில் நடித்து இருந்தார். அந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அந்தப் படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா தற்போது நடிகர் கவின் உடன் இணைந்து நடித்துள்ளார். ஹாய் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கி உள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முன்னதாக பாடல்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது.

கவின் – நயன்தாராவின் ஹாய் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது:

இந்த நிலையில் முன்னதாக கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள இந்த ஹாய் படத்தை வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படம் வருகின்ற 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… கார்த்திக் சுப்பராஜின் டோரதி படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ் – வைரலாகும் வீடியோ

ஹாய் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ப்ரோ கோட் படத்தின் டைட்டிலை இப்படி மாற்றிவிட்டோம் – ரவி மோகன் ஓபன் டாக்

Follow Us