AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ப்ரோ கோட் படத்தின் டைட்டிலை இப்படி மாற்றிவிட்டோம் – ரவி மோகன் ஓபன் டாக்

Actor Ravi Mohan talks about Bro Code movie name changed | தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு ப்ரோ கோட் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட படத்தின் டைட்டிலை தற்போது மாற்றி உள்ளது குறித்து ரவி மோகன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ப்ரோ கோட் படத்தின் டைட்டிலை இப்படி மாற்றிவிட்டோம் – ரவி மோகன் ஓபன் டாக்
ப்ரோ கோட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Aug 2026 10:53 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையகாக காத்திருக்கின்றது. தொடர்ந்து நாயகனாக பிசியாக வலம் வரும் நடிகர் ரவி மோகன் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் ரவி மோகன் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். ரவி மோகன் புரடெக்‌ஷன்ஸ் சார்பாக படங்களை தயாரிக்கவும் தொடங்கினார். அதில் முதல் படமாக அறிவிக்கப்பட்டது ப்ரோ கோட் என்ற படம்.

இந்தப் படத்தினை இயக்குநர் கார்த்திக் யோகி எழுதி இயக்கிறார். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ கடந்த 2025-ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் டைட்டில் மதுபான கம்பெனியின் பெயர் என்றும் அதனை படத்திற்கு பயன்படுத்த கூடாது என்று வழக்கு தொடர்ந்து பெயரை மாற்ற உத்தரவிடப்பட்டது.

ப்ரோ கோட் படத்தின் டைட்டிலை இப்படி மாற்றிவிட்டோம்:

இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது தற்போது ப்ரோ கோட் என்ற தலைப்பை  ப்ரோ க்ளப் என மாற்றியுள்ளதாக நடிகர் ரவி மோகன் தெரிவித்தார். இப்படம் மிகச் சிறப்பாக உருவாகி வருகிறது. இதுவரை இரண்டு படப்பிடிப்பு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன, இன்னும் இரண்டு கட்டங்கள் மீதமுள்ளன. மீதமுள்ள காட்சிகளை வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நடிகர் விஷாலின் மகுடம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியது

Follow Us