AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தெலுங்கு சினிமாவில் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரவி மோகன்?

Ravi Mohan is set to portray Lord Sri Venkateswara | நடிகர் ரவி மோகன் தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் நடிகர் ரவி மோகன் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரவி மோகன்?
ரவி மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Aug 2026 18:56 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் ரவி மோகன் தொடர்பான சினிமா செய்திகள் மட்டும் இன்றி அவரது சொந்த வாழ்க்கை தொடர்பான செய்திகளும் கடந்த 2024-ம் ஆண்டில் இருந்து அதிக அளவில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இவர் கடந்த 2024-ம் ஆண்டு நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இவரது சொந்த வாழ்க்கை மற்றும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் என இரண்டும் மாறி மாறி வெளியாகி வைரலாகி வருகின்றது.

தொடர்ந்து சினிமாவில் நாயகனாக வலம் வரும் இவர் தற்போது இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் அந்த படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் நாயகனாக நடித்த படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளது.

தெலுங்கில் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரவி மோகன்?

இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரவி மோகன் வரவிருக்கும் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமானாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் விரைவில் இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… பிக் பாஸ் சீசன்10ல் பங்குபெறும் சின்னத்திரை பிரபலங்கள்.. அடடே இவர்களா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தமிழ் டூ தெலுங்கு.. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இந்த சிறுமி எந்த நடிகைனு தெரியுமா?

Follow Us