Myssa: ரசிகர்களே கவலை வேண்டாம்… மைசா பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயங்கள் குறித்து விளக்கம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா!
Rashmika Mandanna Injury: தென்னிந்திய சினிமாவில் லீட் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படமான மைசா என்ற படத்தில் நாயகியாக நடித்துவந்த நிலையில், அண்மையில் இவருக்கு விபத்து ஏற்பட்டது. ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட காயங்கள் குறித்து ராஷ்மிகா மந்தனா விளக்க பதிவை வெளியிட்டுள்ளார்.
கன்னட சினிமாவின் மூலம் நாயகியாக அறிமுகமாகி, தற்போது தெலுங்கு சினிமாவில் லீட் ஆக்ஷன் நாயகியாக நடித்துவருபவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தி கேர்ள்பிரண்ட் (The Girlfriend) . இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டில் வெளியான நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் தேசிய விருதையும் வென்றது. இப்படமானது திரையரங்குகளில் சிறப்பான நிலையில், வெற்றிப்படமாக திகழ்ந்தது. இந்த படத்திற்கு பின் ரணபாலி (Ranabaali) என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு (Vijay Deverakonda) ஜோடியாக ராஷ்மிகா நடித்துவந்தார். மேலும் இவர் இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்க, நடித்துவரும் படம்தான் மைசா (Myssa). இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் இருந்து தொடங்கியது. இப்படம் பெண்ணியம் சார்ந்த அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுவருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங்கில் ராஷ்மிகா மிகவும் பிசியாக இருந்துவந்தார். அண்மையில் இவருக்கு இப்படத்தின் ஷூட்டிங்கின்போது பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஷூட்டிங்கில் நடந்த காயம் குறித்து விளக்கமாக இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை ராஷ்மிகா வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: ரேஸராக அஜித்.. கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரல்!
மைசா பட ஷூட்டிங்கில் நடந்த படுகாயம் குறித்து ராஷ்மிகா:
அந்த பதிவில் ராஷ்மிகா, காயங்கள் கொடுமை, இது யாருக்கும் தெரியக்கூடாது என நினைத்திருந்தேன். ஆனால் என்ன செய்வது. இது கொஞ்சகாலத்துக்கு முன்பே நடந்தது. இது எனக்கு ஏற்பட்ட மூன்றாவது காயம். நான் கண்டிப்பாக என் உடலை ஒரு மனித உடலைப் போல நடத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், ஏதோ ஒரு இயந்திரத்தைப் போல அல்ல. இது எப்படிப்பட்ட காயம் என்றால், உங்கள் இடுப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்கள் இடுப்பை உங்கள் காலுடன் இணைக்கும் 4 தசைநார்கள் இருக்கும், என் வலது இடுப்பில் உள்ள அந்த தசைநார்களில் ஒன்று கிழிந்துவிட்டது.
இதையும் படிங்க: விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து The One Rule பாடல் வைரலாகி வருகின்றது
நான் என் காலைத் தூக்குவதற்கும், மற்ற வேலைகளைச் செய்வதற்கும் அது மீண்டும் இணைய வேண்டும். இது மைசா பட நடன ஷூட்டிங்கின் போது நடந்தது என அதில் அவர் கூறியுள்ளார். மேலும் படுகாயம் அடைந்ததால் ஓய்வில் இருப்பதாகவும் இதனால உடல் எடை கூடிவிடக்கூடாது என நினைப்பதாகவும், ஜிம்முக்கு போகமுடியாத விஷயம் தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மைசா பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட படுகாயம் குறித்து ராஷ்மிகா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
ராஷ்மிகா மைசா படத்திற்கு பின், மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அல்லு அர்ஜுன் நடித்துவரும் ராக்கா படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்திலும் நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.