படப்பிடிப்புல் ராஷ்மிகா மந்தனாவுக்கு பலத்த காயம் – விவரம் இதோ
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, நடனம் மற்றும் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது அவரது இடுப்புப் பகுதியில் உள்ள தசைநார் முழுமையாகப் பிரிந்துவிட்டது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாகத் தொழில்முறை விளையாட்டு வீரர்களிடம் காணப்படும் இத்தகைய காயத்தால், அவர் ஆறு வாரங்களுக்கு முழுமையான படுக்கை ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக தமிழில் தனுஷுக்கு ஜோடியாக குபேரா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படப்பிடிப்புல் ராஷ்மிகா மந்தனாவுக்கு பலத்த காயம்
நடிகை ராஷ்மிகா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார், அந்த வகையில் ரணபலி மற்றும் மைசா ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்தார். இப்படங்களில் இடம்பெற்ற சண்டை காட்சிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட கடுமையான உடல் உழைப்பின் காரணமாகவே அவருக்கு இந்த இடுப்புப் பகுதி காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க : இன்னும் அந்தச் சம்பவத்திலிருந்து மீளவில்லை – ஜன நாயகன் பட எடிட்டர் எமோஷனல் பேச்சு!




மருத்துவ அறிக்கைகளின்படி, அவரது இடுப்புப் பகுதியில் உள்ள தசைநார் முழுமையாகப் பிரிந்துவிட்டதால் நிலைமை தீவிரமாக உள்ளது. தீவிர உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் தொழில்முறை விளையாட்டு வீரர்களிடமே இத்தகைய காயங்கள் பொதுவாகக் காணப்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். காயத்தின் தீவிரத்தை ஆய்வு செய்த பிறகு, அவர் ஆறு வாரங்களுக்கு முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதன் விளைவாக, அவர் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு அட்டவணைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ராஷ்மிகா பல முக்கியத் திரைப்படத் திட்டங்களில் பிஸியாக இருக்கும் நிலையில், இந்தக் காயத்தால் அவர் சிறிது காலம் படப்பிடிப்பிலிருந்து விலகி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், முறையான சிகிச்சை மற்றும் ஓய்வின் மூலம் அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் மைசா திரைப்படம் குறித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் முதல்முறையாக, ஒரு நடிகையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நீருக்கடியில் நடைபெறும் சண்டைக் காட்சியில், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கி வருகிறார்.
இதையும் படிக்க : தர்மன் படத்தில் சிம்ரன் மேம் இணைந்தது இப்படிதான்- இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து!
அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில், நீருக்கடியில் சண்டைக் காட்சிக்காக ராஷ்மிகா தீவிரமாக பயிற்சி மேற்கொள்வதும், தொழில்முறை டைவர்களுடன் இணைந்து படப்பிடிப்பில் ஈடுபட்டிருப்பதும் இடம்பெற்றுள்ளது. படக்குழு வெளியிட்ட தகவலின்படி, இந்த சண்டைக் காட்சியை படமாக்குவதற்காக ராஷ்மிகா இரண்டு நாட்களில் சுமார் 20 மணி நேரம் நீருக்கடியில் செலவிட்டுள்ளார். மிக முக்கியமாக, இந்தக் காட்சிக்காக டூப் கலைஞர் அல்லது பாடி டபிள் யாரையும் பயன்படுத்தாமல், அனைத்து சாகசக் காட்சிகளிலும் ராஷ்மிகாவே நேரடியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.