AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

VAS: என்னப்பா ரெடியா? சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா? – வெளியான அறிவிப்பு!

Vishwanath and Sons Movie Audio Launch: தி ஒன் என்று ரசிகர்களால் எப்போது அழைக்கப்பட்டுவரும் நாயகன்தான் சூர்யா. தெலுங்கு இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இவர் நடித்துள்ள புது படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இது ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இதன் இசைவெளியீட்டு விழா எப்போது? எங்கு நடைபெறுகிறது? என படக்குழு அறிவித்துள்ளது.

VAS: என்னப்பா ரெடியா? சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா? – வெளியான அறிவிப்பு!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 31 Jul 2026 11:53 AM IST

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில், சூர்யா (Suriya) நடித்துவந்த புத்தம் புது திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons). இந்த படமானது வயது அதிகமான தொழிலதிபரான சூர்யாவுக்கும், வயது குறைந்த பெண்ணாக நடித்த மமிதா பைஜூவிற்கும் (Mamitha Baiju) இடையே எவ்வாறு காதல் மலர்கிறது என்பது தொடர்பான ஒரு பேமிலி என்டெர்டெயிமெண்ட் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இதை சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் கீழ் நாக வம்சி தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையில் இதுவரை மொத்தமாக 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதை படக்குழு அறிவித்துள்ளது. தற்போது வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அது ஒரு முன்னோட்டம் மட்டுமே.. ரஜினியுடன் தர்மன் படத்தில் நடிப்பது குறித்து பகிர்ந்த நடிகை சிம்ரன்!

சூர்யா – மமிதா பைஜூவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இசைவெளியீட்டு விழா:

சூர்யா மற்றும் நடிகை மமிதா பைஜூவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதியில் நடைபெறுகிறது. கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் இந்த படத்தின் இசை வெளியீட்டுவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இப்படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 2ம் தேதியில் நடைபெறும் இசைவெளியீட்டு விழாவில், முழு ஆல்பம் பாடல்களும் வெளியாகவுள்ளதாம். தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஆடியோ லான்ச் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் அறிவிப்பு பதிவு:

இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை இயக்குநரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி வாங்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியிடப்படவுள்ளது.

இதையும் படிங்க: பச்சப் புள்ள… கவின் – நயன்தாராவின் ஹாய் படத்திலிருந்து வெளியான 3வது சிங்கிள்!

இந்த படத்துடன் விஷாலின் மகுடம் மற்றும் கவிபினின் நடிப்பில் ஹாய் பொன்பர திரைப்படங்களும் வெளியாக காத்திருக்கிறது. இன்னும் 2 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இதர அப்டேட்டுகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us