AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Venky Atluri: ஒரு நாளுக்கு 10 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்வாரு – சூர்யாவை புகழ்ந்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

Director Venky Atluri About Suriyas Dedication: தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர்தான் வெங்கி அட்லூரி. இவரின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள புது படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படத்தின் ஷூட்டிங்கில் சூர்யா செய்த விஷயங்கள் குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி வெளிப்படையாக பேசியுள்ளார்.

Venky Atluri: ஒரு நாளுக்கு 10 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்வாரு – சூர்யாவை புகழ்ந்த இயக்குநர் வெங்கி அட்லூரி!
சூர்யா பற்றி வெங்கி அட்லூரிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 Jul 2026 17:18 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியுள்ள நேரடி திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons) . இப்படத்தில் தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்க, தயாரிப்பாளர் நாக வம்சி (Naga Vamsi) தயாரித்திருந்தாலும், தமிழ் படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தி ஒன் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் உண்மையிலே 23 வயது வித்தியாசம் இருக்கும் நிலையில், இப்படத்திலும் அதுபோன்ற கதைக்களத்தை மையமாக கொண்ட கதாபாத்திரமாகவே நடித்துள்ளனர். இதில் நடிகர் சூர்யா தொழிலாலதிபராகவும், அவரை காதலிக்கும் இளம் பெண்ணாக மமிதா பைஜூ நடித்துள்ள. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) இசையமைக்க, இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி அதில், சூர்யாவின் நேரம் தவறாமை மற்றும் அவரின் தாழ்மையான குணம் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: துல்கர் சல்மான் பர்த்டே.. ஸ்ரீ ஸ்ரீ படத்திலிருந்து வெளியான ‘வானே வானே’ பாடல்!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஷூட்டிங்கில் சூர்யாவின் நேரம் தவறாமை குறித்து பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி:

அந்த பேட்டியில் இயக்குநர் வெங்கி அட்லூரி அதில், “சூர்யா சாருக்கு 50 வயது கடந்தது. நீங்களே நினைத்துப்பாருங்கள் ஒரு டாப் நடிகர், ஒரு வருடத்திற்கு மூன்று படங்களில் நடிக்கிறார் அந்த மூன்று படங்களும் வெளியாகிறது. இதெல்லாம் சாதாரணமான விஷயம் இல்ல. அவர் பெரிதாக ஓய்வெடுப்பதில்லை, ரிலாக்ஸ் பண்ணுவதில்லை.

இதையும் படிங்க: நடிகர் சூரியின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்

அவர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10 மணிநேரங்களுக்கு மேல் வேலை செய்கிறார். ஷூட்டிங்கிலும் எந்தவித புகாரும் இல்லாமல், 10 மணி நேரத்திற்கும் மேல் பணியாற்றுகிறார். அவரை எனது படக்குழுவினர் எப்போது அழைத்தாலும் ஷூட்டிங்கிற்கு ஓகே சொல்லுவாரு. எப்போது அவர் முடியாது என சொன்னதில்லை” என்று அவர் அதில் பேசியுள்ளார்.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த படமானது பேமிலி பொழுதுபோக்கு மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா மற்றும் மமிதா பைஜூ இருவரும் மெயின் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவினா டாண்டன் போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us