VAS Movie: சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம் – வெளியான போஸ்டர்!
Vishwanath And Sons TN Rights: தென்னிந்திய சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படமானது 2026ம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் தமிழக ரிலீஸ் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் கருப்பு (Karuppu). கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகியிருந்த இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ balaji) இயக்கியிருந்தார். இந்த படமானது உலகமெங்கும் சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலித்து ஹிட்டாகியிருந்தது. இப்படத்தை அடுத்து இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா இணைந்த படம்தான் சூர்யா46. இப்படத்திற்கு பின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது.
இந்த படமானது பிரம்மாண்டமாக மற்றும் பேமிலி பொழுதுபோக்கு கதையில் உருவாகியுள்ளது. இந்த படமானது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இதன் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.




இதையும் படிங்க: லீக்கானாலும் பீக் குறையல.. ஜன நாயகன் பட முதல் நாள் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்:
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யாவுடன், மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் நாக வம்சி சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யா மற்றும் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இப்படம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை “ப்ரைமார்க் புரொடக்ஷன்ஸ்” என்ற நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி இணைந்து கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Taking our next big step 🔥
We @PrimarkProd @lingasamy21 are absolutely thrilled and proud to present #VishwanathAndSons across Tamil Nadu ❤️
See you all in theaters for a massive festive celebration from August 14th 😎#VASonAUG14th @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju… pic.twitter.com/CLoYWYRt1a
— Primark Productions (@PrimarkProd) July 24, 2026
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட 2வது பாடல் :
இப்படத்தின் 2வது பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடிகர் சூர்யாவே பாடியுள்ளார். இப்படத்தின் தமிழ் பாடல் வரிகளை இயக்குநரும், நடிகருமான கென் கருணாஸ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. “தி வெட்டிங் சாங்” என்ற இப்பாடலானது, 2026ம் ஆண்டு ஜூலை 25ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.