Suriya: ‘தி வெட்டிங் சாங்..’ சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட 2வது பாடல் புரோமோ வெளியீடு!
The Wedding Song Promo: சூர்யா நடிப்பிலும், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இன்று 2026ம் ஜூலை 23ம் தேதியில் சூர்யா தனது 51வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் 2வது பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த படம்தான் கருப்பு (Karuppu). இதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, சூர்யா நாயகனாக நடித்து ஹிட் கொடுத்திருந்தார். இந்த படத்திற்கு பின் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம்தான் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” (Vishwanath And sons). இதில் சூர்யா பிஸ்னஸ் மேனாக இருக்க, அவரை காதலிக்கும் இளம் பெண்ணாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த படமானது குடும்ப பொழுதுபோக்கு மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இப்படமானது வரும் ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே “பட்டாம்பூச்சி” என்ற முதல் பாடல் வெளியாகியிருந்தது. அந்த வகையில், சூர்யாவின் குரலில் “தி வெட்டிங் சாங்” என்ற பாடலின் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: கான் சிட்டி முதல் பள்ளிச்சட்டம்பி வரை… நாளை ஓடிடியில் வெளியாகும் தென்னிந்திய படங்களின் லிஸ்ட் இதோ
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் தி வெட்டிங் சாங் படத்தின் புரோமோ வீடியோ குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Turn the volume up 😎
The celebrations are just getting started 🔥#VASSecondSingle ~ #TheWeddingSong Tamil Promo out now ❤️Full Song on July 25th.
Sung by THE ONE @Suriya_offl 🎙️
A @gvprakash Musical 🎧 #VishwanathAndSons #VASonAUG14th #VenkyAtluri @_mamithabaiju… pic.twitter.com/TjQwiV1Edl— Sithara Entertainments (@SitharaEnts) July 23, 2026
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் 2வது பாடல் உருவாகியுள்ளது. தி வெட்டிங் சாங் என்ற இப்பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளார். இந்த பாடலின் வரிகளை நடிகரும், இயக்குநருமான கென் கருணாஸ் எழுதியுள்ளார். இன்று (23/07/2026) சூர்யா தனது 51வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அதன் புரோமோ வெளியாகியுள்ளது. இப்படலானது வரும் 2026ம் வரும் 2025ம் ஆண்டு ஜூலை 25ம் தேதியில் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பகவந்த் கேசரி ரீமேக்.. அந்த காட்சிகள் இன்னும் தொந்தரவு செய்ததாக முதல்வர் விஜய் சொன்னாரு – இயக்குநர் அனில் ரவிபுடி!
சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் மோதும்:
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படடுடன் கவின் மற்றும் நயன்தாரா நடித்த ஹாய் படம் வெளியாகிறது. அத்துடன் விஷால் இயக்கி, நடித்த மகுடம் படமும் வெளியாகிறது. சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் கிட்டத்தட்ட 2 படங்கள் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.