கான் சிட்டி முதல் பள்ளிச்சட்டம்பி வரை… நாளை ஓடிடியில் வெளியாகும் தென்னிந்திய படங்களின் லிஸ்ட் இதோ
Here is the list of South Indian films releasing on OTT tomorrow | தென்னிந்திய மொழிகளில் வாரம் வாரம் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருவது போல ஓடிடியிலும் வாரம் வாரம் புதுப் படங்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கான் சிட்டி படம்: தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக வலம் வருகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியனா படம் கான் சிட்டி. டார்க் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் பலர் நடித்து இருந்தனர். மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை அன்னா பென் நாயகியாக நடித்து இருந்த நிலையில் நடிகர்கள் யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி இந்த கான் சிட்டி படம் நாளை 24-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
ஈகோ ராமன் படம்: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் சமீபத்தில் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் இறப்பதற்கு முன் நடித்த படங்கள் தொடர்ந்து வெளியாகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஈகோ ராமன் என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் சிபி சக்ரவர்த்தி நாயகனாக நடிக்க நடிகர்கள் கீர்த்தனா ஸ்ரீகுமார், சேரன் ராஜ், முரளி, கவிதா ரமேஷ் என பலர் நடித்து இருந்தனர். இந்தப் படம் நாளை 24-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.
சீக்ரெட் ஆஃப் கலிங்கா படம்: மலையாள சினிமாவில் ஹாரர் காமெடி பாணியில் உருவாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் சீக்ரெட் ஆஃப் கலிங்கா. இந்தப் படத்தை இயக்குநர் சனீஷ் உன்னிகிருஷ்ணன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர்கள் தியான் ஸ்ரீனிவாசன், அல்தாஃப் சலீம், ரியாஸ் கான், மாளவிகா மேனன், மரீனா மைக்கேல், லெக்ஷ்மி நந்தன், கௌரி நந்தா, உல்லாஸ் பந்தளம், சனீஷ் உன்னிகிருஷ்ணன், ஆதிர்ஷா வினோத் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் நாளை 24-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு முதல் சன்நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.




Also Read… Trisha Krishnan: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட FDFS-வை கண்டுகளித்த திரிஷா – வைரலாகும் வீடியோ!
பள்ளிச்சட்டம்பி படம்: நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து மலையாள சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பள்ளிச்சட்டம்பி. இந்தப் படத்தில் நடிகை கயாடு லோஹர் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கி இருந்தார். இந்தப் படம் நாளை 24-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு முதல் சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… கடும் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.. “புதுகோட்டை தியேட்டரில் திரைக்கு முள்வேலி” என்ன காரணம்!