AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒன் லாஸ்ட் டைம்… தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் ரிலீஸை கொண்டாடும் ரசிகர்கள்

Jana Nayagan Movie Release Vijay Fans Celebration Videos | தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த ஜன நாயகன் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஒன் லாஸ்ட் டைம்… தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் ரிலீஸை கொண்டாடும் ரசிகர்கள்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 23 Jul 2026 08:32 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் தளபதி விஜய்க்கு (Actor Thalapathy Vijay) தமிழ் நாட்டில் மட்டும் இன்றி உலக அளவில் ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் தமிழ் நாட்டில் அரசியல் கட்சியைத் தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ளார். முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் தளபதி விஜய் இனி படங்களில் நடிக்க போவதில்லை என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். இதன் காரணமாக இறுதியாக அவரது நடிப்பில் உருவான ஜன நாயகன் தான் கடைசியாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம். இந்தப் படம் பல தடைகளைக் கடந்து இன்று உலகம் முழுவதும் பல இடங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்பு எல்லாம் தமிழ் நாட்டில் தளபதி விஜய் படம் வருகிறது என்றால் இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி தங்களது கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள்.

ஆனால் பல அசம்பாவிதங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் படங்களை வெளியிடுவதில் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக படத்தின் முதல் காட்சியே காலை 9 மணிக்குதான் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அண்டை மாநிலங்களுக்கு சென்று அதிகாலை காட்சியை கண்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள். தமிழ் நாட்டில் முன்பு விட கொண்டாட்டங்கள் குறைவாக இருந்தாலும் ஆங்காங்கே விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தளபதிவு:

மதுரையில் தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் வெளியீட்டை கொண்டாடும் ரசிகர்கள்.

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தளபதிவு:

தளபதி விஜயின் ஜன நாயகன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் அதனை கொண்டாடும் ரசிகர்கள்.

Also Read… பராசக்தி படத்திற்கு வில்லனாக ரவி மோகன் முதல் சாய்ஸ் இல்லை – தயாரிப்பாளர் ஓபன் டாக்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தளபதிவு:

தளபதி விஜயின் ஜன நாயகன் படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.

Also Read… ஜன நாயகன் படத்தில் வில்லனாக பாபி தியோலை நடிக்க வைக்க என்ன காரணம்? இயக்குநர் ஓபன் டாக்

Follow Us