AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பராசக்தி படத்திற்கு வில்லனாக ரவி மோகன் முதல் சாய்ஸ் இல்லை – தயாரிப்பாளர் ஓபன் டாக்!

Producer Aakash Baskaran talks about Ravi Mohan character in Parasakthi movie | தமிழ் சினிமாவில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்து சமீபத்தில் வெளியான பராசக்தி படத்தில் அவர் முதல் சாய்ஸ் இல்லை என்று தயாரிப்பாளர் கூறியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பராசக்தி படத்திற்கு வில்லனாக ரவி மோகன் முதல் சாய்ஸ் இல்லை – தயாரிப்பாளர் ஓபன் டாக்!
பராசக்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jul 2026 09:31 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் தொடர்ந்து சினிமாவில் நாயகனாக நடித்து வரும் நிலையில் வில்லனாக நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார் நடிகர் ரவி மோகன். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கராக எழுதி இயக்கிய பராசக்தி படத்தில் தான் நடிகர் ரவி மோகன் வில்லன் வேடத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வந்த நிலையில் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. படம் வெளியான போது படத்தைப் பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நிறைந்த இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகனின் நடிப்புதான் சிறப்பாக இருந்து என்று தொடர்ந்து பாராட்டி வந்தனர்.

நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடிகர் ரவி மோகன் நடித்து இருந்தாலும் அவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டினர். இந்த நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பராசக்தி படத்திற்கு வில்லனாக ரவி மோகன் முதல் சாய்ஸ் இல்லை:

தொடக்கத்தில், வில்லன் கதாபாத்திரத்திற்கு ரோஷன் மேத்யூஸை சுதா மேம் மனதில் வைத்திருந்தார். ஆனால், எதிர்மறைத் தன்மையுள்ள அந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு பெரிய நடிகரை நான் விரும்பினேன். அரவிந்த் சாமி மற்றும் மாதவன் ஆகியோரை நாங்கள் பரிசீலித்தோம், ஆனால் அவர்களிடம் அதற்கான தேதிகள் கிடைக்கவில்லை. ரவி மோகனை வில்லனாக நடிக்க வைக்கும் முடிவை நானே எடுத்தேன். நான் அவரிடம் பேசினேன், சுதா மேமும் அவரிடம் பேசினார். அதன் பிறகு சுதா மேம் மீது நம்பிக்கை வைத்து அவர் இப்படத்தில் இணைய ஒப்புக்கொண்டார்.

அந்த வில்லன் கதாபாத்திரத்தில் ரவி மோகன் நடிக்கிறார் என்பதைக் கேட்டு சிவகார்த்திகேயன் ஆச்சரியமடைந்தார். அதே சமயம், அவரை நாம் மதிக்க வேண்டும் என்றும், அவருக்கு உரிய முக்கியத்துவத்தையும் சரியான முறையில் பெயர் இடம்பெறும் வகையிலான அங்கீகாரத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார் என்று ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பகவந்த் கேசரி படம் விஜய் சாருக்கு பிடிக்க இதுதான் காரணம் – இயக்குநர் ஹெச். வினோத்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பூஜையுடன் தொடங்கியது ஜீவாவின் தகப்பன் படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் போட்டோஸ்!

Follow Us