ரஜினியின் சாதனையை முறியடிப்பாரா விஜய்? ஜனநாயகன் முன்பதிவில் வசூல் மழை
தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பல போராட்டங்களுக்கு பிறகு வருகிற ஜூலை 23, 2026 அன்று வியாழக்கிழமை வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படம் முன்பதிவில் இந்திய அளவில் ரூ.6.7 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பல போராட்டங்களுக்கு பிறகு வருகிற ஜூலை 23, 2026 அன்று வியாழக்கிழமை வெளியாகிறது. நீண்ட நாட்களாக சென்சார் சம்மந்தப்பட்ட பிரச்னையில் சிக்கியிருந்த இந்தப்படம் தற்போது அனைத்தும் முடிவுக்கு வந்த நிலையில் வெளியாக தயாராகி வருகிது. இந்த நிலையில் இந்தப் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே இந்தப் படம் ரூ.6.7 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்டுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் கடைசி படமான இந்தப் படத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருந்ததே இதற்கு காரணம்.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், முதல்வர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு பின் வெளியாகும் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9, 2026 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்சார் பிரச்னையின் காரணமாக இந்தப் படம் தள்ளிப்போனது. இதனையடுத்து படத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க : களம் காணும் ஜனநாயகன்.. விஜய் ரசிகர்கள் மத்தியில் எகிறும் டி-ஷர்ட் மவுசு!
முன்பதிவில் ரூ.6.7 கோடி வசூல்
இந்த நிலையில் இந்தப் படம் வருகிற ஜூலை 23, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் முன்பதிவு ஜூலை 19, 2026 இன்று மாலை வெளியானது. இந்த நிலையில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே இந்திய அளவில் ரூ.6.7 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழில் மட்டும் ரூ.3.86 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,399 காட்சிகளுக்கான முன்பதிவில் இதுவரை 1,33,904 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்புக்கும் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் ரசிகர்களிடேய ஆர்வம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.




முன்பதிவில் தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகாவில் ரூ.2.59 கோடியும், கேரளாவில் ரூ.1.36 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவி்கின்றன. வெளியாகும் நாள் நெருங்க, நெருங்க வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : அவர் செய்தது போல நான் எதுவும் செய்யமாட்டேன்.. முதல்வர் விஜயை மீண்டும் கிண்டல் செய்த மலையாள நடிகர்!
ரஜினியின் சாதனையை முறியடிப்பாரா விஜய்?
உலக அளவில் தமிழ் திரைப்படங்களுக்கான முதல் நாள் வசூலைப் பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம் ரூ.151 கோடி வசூலூடன் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பே இதற்கு காரணம் என கூறப்பட்டது. அதற்கு முன் முதல்வர் விஜய்யின் லியோ படம் ரூ.148.5 கோடி வசூலுடன் 2வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது ஜனநாயகன் படத்துக்கு முன்பதிவில் ரசிகர்களின் ஆர்வத்தை காணும்போது கூலி பட சாதனையை முறியடிக்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.