Jana Nayagan: அடியே என் பூந்தேனே.. ஜன நாயகன் பட புதிய பாடலை வெளியிட்ட படக்குழு!
Adiye En Poonthane Song: தமிழக முதல்வர் விஜய் சினிமாவில் கடைசியாக நடித்திருந்த திரைப்படம்தான் ஜன நாயகன். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், இதிலிருந்து அடியே என் பூந்தேனே என்ற லிரிகள் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் எச். வினோத்தின் (H Vinoth) இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகியுள்ளதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் முன்னநாள் நடிகரும், தமிழக முதல்வருமான தளபதி விஜய் (CM Vijay) நாயகனாக நடித்துள்ளார். இது இவர் சினிமாவில் நடித்திருந்த கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் அதிரடி ஆக்ஷன் போலீசாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இந்த கூட்டணி ஏற்கனவே நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் இணைந்திருந்தது என்பது தெரிந்ததே. மேலும் இவர்களுடன் இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju), பிளெஸ்ஸி, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படமானது கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பின், சென்சார் பிரச்சனைகள் முடிவடைந்த பிறகு வெளியாக தயாராகியுள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் (Anirudh) இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்திலிருந்து 5வது பாடல் வெளியாகியுள்ளது. அடியே என் பூந்தேனே என்ற லிரிகள் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்?
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட அடியே என் பூந்தேனே பாடல் குறித்த எக்ஸ் பதிவு:
#AdiyeEnPoonthene Lyric Video is out now ❤️
▶️ https://t.co/lgats0Es9i#JanaNayaganFromJuly23
The Hon’ble Chief Minister @actorvijay @TheKVNofficial @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial #KarthikNetha #RaviG @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01… pic.twitter.com/pzgmsxfPBf
— KVN Productions (@KvnProductions) July 17, 2026
இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, அவரே பாடியுள்ளார். மேலும் இப்பாடலின் வரிகளை கார்த்திக் நேதா பாடலாசிரியர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எமோஷனல் பாடலாக வெளியாகியிருக்கும், இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
ஜன நாயகன் படத்தின் நியூ ட்ரெய்லர் வெளியாகுமா?
ஜன நாயகன் படத்திலிருந்து கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி தொடக்கத்திலே ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. ட்ரெய்லர் வெளியாகியும் படத்திற்கு சென்சார் கிடைக்காததன் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த ட்ரெய்லர் வெளியாகி சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: டிமாண்டி காலனி 3 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? படக்குழு கொடுத்த சென்சார் அப்டேட்!
இது வெளியாகி கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கும் மேலான நிலையில், மீண்டும் ரிலீஸ் ட்ரெய்லரை படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்தனர். ஆனால் புதிய ட்ரெய்லர் வெளியாகாது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது பற்றி இன்னும் படக்குழு எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.