Jason Sanjay: சிக்மா படத்திற்கு பின் அடுத்த பிளான் இதுதான் – ஜேசன் சஞ்சய் பேச்சு!
Jason Sanjay About His Future Plans: தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக தற்போது பிரபலமாகிவருபவர் ஜேசன் சஞ்சய். இவரின் இயக்கத்தில் சிக்மா என்ற படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. அண்மையில் பத்திரிகை பேட்டியில் பேசிய ஜேசன் சஞ்சய், சிக்மா படத்தின் பின் தனக்கு இருக்கும் பிளான் குறித்து தெரிவித்துள்ளார்.
இளம் இயக்குநர் ஜேசன் சஞ்சய் (Director Jason Sanjay) இயக்கத்தில் தமிழில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் சிக்மா (Sigma). இதில் தெலுங்கு நடிகை சந்தீப் கிஷன் (Sundeep Kishan) மற்றும் ஃபரியா அப்துல்லா போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் விஜய்யின் (CM Vijay) மூத்த மகன்தான் ஜேசன் சஞ்சய். தனது தந்தை விஜய், தற்போது சினிமாவிலிருந்து முழுவதும் விளக்கியுள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து சினிமாவில் ஜேசன் சஞ்சய் நுழைந்துள்ளார். விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. அதையடுத்து ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா படமும் வெளியாக காத்திருக்கிறது.
தற்போது இப்படத்தின் புரோமோஷன் வேலைகளும் தொடங்க உள்ள நிலையில், அண்மையில் பத்திரிக்கை நேர்காணல் ஒன்றில் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், சிக்மா படத்திற்கு பின் தனக்கு இருக்கும் பிளான் குறித்து தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: மலைகிராம மக்களின் கல்வி குறித்து பேசும் அருள்வான் படம்… மக்கள் கொடுத்த விமர்சனம்!
சிக்மா படத்திற்கு பின் தனக்கு இருக்கும் பிளான்ஸ் குறித்து ஜேசன் சஞ்சய் பேச்சு:
அந்த பேட்டியில் பேசியிருந்த ஜேசன் சஞ்சய், “எனக்கு ஈரம் படத்திலிருந்து இசையமைப்பாளர் தமனின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது பின்னணி இசை சூப்பராக இருக்கும். சிக்மா படத்திற்காக, அவர் தனித்துவமான இசையமைப்புகளால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மெருகேற்றியுள்ளார். அவரது இசைதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக இருக்கிறது. என் மனதில் ஏற்கனவே 2 மற்றும் 3 வலுவான கதைக்கருக்கள் இருக்கிறது. சிக்மா வெளியான பிறகு அவற்றை முறையாக உருவாக்கத் தொடங்குவேன்” என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய் உடன் கலந்தாலோசித்து முடிவு செய்தோம் – ஜன நாயகன் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் விளக்கம்!
மேலும் அவர். சிக்மா படத்தின் வெற்றிக்கு பிறகு சினிமாவில் நடிக்க வருவதாக கூறப்படும் நிலையில், அது குறித்தும் ஜேசன் சஞ்சய் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதனால் இவர் சினிமாவில் நடிகராகவும் விரைவில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்மா படம் குறித்து ஜேசன் சஞ்சய் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Crafted in style to leave a mark. ⚡️ Step behind the scenes of #SigmaStyle from #SIGMA 🔥
Tamil 🔗 https://t.co/IoLEPBQ9m9
Telugu 🔗 https://t.co/P2bFPKEFgM #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @fariaabdullah2 #RajuSundaram #SampathRaj @shivpanditt… pic.twitter.com/LHtEnQdves— Jason Sanjay Official (@official_jsj) June 9, 2026
சிக்மா படமானது 2026ம் ஆண்டு ஜூலை 31ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன் (2026 ஜூலை 23) ஜன நாயகன் படம் வெளியாகிறது.அதனால் சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.