Sigma Style: ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் நடனத்தில்.. சிக்மா பட ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் வெளியீடு!
Sigma Movie First Single: ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள புதிய திரைப்படம்தான் சிக்மா. இதில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா இணைந்த நடித்துள்ள படம்தான் சிக்மா. இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், ஜேசன் சஞ்சய் மற்றும் சந்தீப் கிஷனின் நடனத்தில் சிக்மா ஸ்டைல் என்ற முதல் பாடல் வெளியானது.
தமிழக முதல்வரின் தளபதி விஜய்யின் (CM Thalapathy VIjay) மகன் ஜேசன் சஞ்சயின் (Jason Sanjay) இயக்கத்தில், தமிழில் முதல் முதலாக உருவாகியுள்ள திரைப்படம்தான் சிக்மா (Sigma). ஜேசன் சஞ்சய் தமிழில் விஜய் நடித்திருந்த வேட்டைக்காரன் என்ற படத்தில், அவருடன் இணைந்து பாடல் ஒன்றில் நடனமாடியிருந்தார். இதற்கு பிறகு அவர் சினிமாவில் எந்த படங்களிலும் நுழையவில்லை. இதையடுத்து தற்போது இயக்குனராக இவர் அறிமுகமாகியுள்ளாள் முதல் படம்தான் சிக்மா. இதில் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) மற்றும் ஃபரியா அப்துல்லா (Faria Abdullah) இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது தயாரிக்க, பிரபல இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ள நிலையில், தற்போது முதல் பாடல் வெளியாகியுள்ளது.
சிக்மா ஸ்டைல் (Sigma Style) என்ற இந்த முதல் பாடலில் ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் மற்றும் நடிகை ஃபரியா அப்துல்லா மூவரும் இணைந்த நடனமாடியுள்ளனர். இது ஜேசன் சஞ்சயின் முதல் படம் என்ற நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் என்ற பாடலை நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: தளபதி விஜய் முதல்வர் விஜய் ஆனதை பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சிக்மா ஸ்டைல் பாடல் குறித்த எக்ஸ் பதிவு:
Happy to launch the first single of #SIGMA ⚡️
Tamil 🔗 https://t.co/GMSEShPYF2
Telugu 🔗 https://t.co/6VwUHy6xnnSending my best wishes to dear Jason Sanjay & the entire team for a successful release and an incredible journey ahead. 🔥@official_jsj @LycaProductions… pic.twitter.com/O7KKooyPEs
— Dulquer Salmaan (@dulQuer) June 4, 2026
சிக்மா பட ரிலீஸ் எப்போது:
சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியால நடிகை ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். சந்தீப் கிஷன் ஏற்கனவே தமிழில் மாநகரம், ராயன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் நடித்துள்ள படமாக இது அமைந்துள்ளது. இந்த படமானது பண கொள்ளை மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் திரைப்படம் போல அமைந்துள்ளது. இதன் ஷூட்டிங் கிட்டத்தட்ட ஒற்றை ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜேசன் சஞ்சய், நடிகர் சந்தீப் கிஷனின் மிகப்பெரிய ரசிகர் என்ற நிலையில், அவரை வைத்தே தனது முதல் படத்தை இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுனின் AA23 படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன்.. மும்பை சென்ற லோகேஷ் கனகராஜ்!
இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 ஜூலை 31ம் தேதியில், தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக வெளியாக தயாராக்கியுள்ளது. அந்த வகையில் இன்று 2026 ஜூன் 4ம் தேதியில் இதன் முதல் சிங்கிள் வெளியான நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.