AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ajith Kumar: தாயின் மறைவிற்கு பிறகு.. கனத்த இதயத்துடன் மீண்டும் கார் ரேஸில் அஜித் – வைரலாகும் பதிவு!

Ajith's Emotional Comeback: கோலிவுட் சினிமாவில் நாயகனாகவும், சர்வதேச கார் ரேஸராகவும் இருந்துவருபவர் அஜித் குமார். இவரின் தாய் மோகினி மணி சமீபத்தில் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவரின் இறுதிச்சடங்கை முடித்த அஜித் குமார் மீண்டும் தனது கார் ரேஸ் பயிற்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

Ajith Kumar: தாயின் மறைவிற்கு பிறகு.. கனத்த இதயத்துடன் மீண்டும் கார் ரேஸில் அஜித் – வைரலாகும் பதிவு!
மீண்டும் கார் ரேஸில் இணைந்த அஜித் குமார் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Jun 2026 16:05 PM IST

தென்னிந்திய சினிமாவில் அனைவராலும் அறியப்படும் நாயகனாக இருந்துவருபவர் தல அஜித் குமார் (Ajith Kumar). இவர் தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்தற்கு முழுமையாக கார் ரேஸ் (Car Racing) பணியில் அஜித் குமார் இணைந்து விட்டார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் கார் ரேஸ் போட்டிகளில் அஜித் குமார் தனது அணியினருடன் கலந்துகொண்டு வருகிறார். இதுவரை பல சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் தனது அணியுடன் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2026ம் ஆண்டு மே 30ம் தேதியில், அஜித்தின் தாயார் மோகினி மணி (Mohini Mani) வயது மூப்பின் காரணமாக காலமானார்.

இவரின் மறைவிற்காக மன வருத்தத்துடன் அஜித் குமார், துபாயில் நடந்த கார் ரேஸ் பயிற்சியை விட்டுவிட்டு வந்திருந்தார். அஜித்தின் தாயின் இறுதிச்சடங்கு 2026 மே 31ம் தேதியில் நடந்திருந்தது. இதை முடித்த அஜித் குமார், மீண்டும் தனது கார் ரேஸ் பணிக்கு திரும்பியுள்ளார். மனவருத்தத்துடன் மீண்டும் அவரின் வாழ்க்கையின் பயணத்தை அஜித் தொடங்கியுள்ளார், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தளபதி விஜய் முதலமைச்சராக வெற்றி பெற்றது வித்தியாசமானது – பவன் கல்யாண் பேச்சு!

தாயின் மறைவிற்கு பின் மீண்டும் கார் ரேஸில் இணைந்த அஜித் குமார் தொடர்பான பதிவு:

நடிகர் அஜித் குமார் துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், தாய் மோகினி மணி மே 30ம் தேதியில் காலமானார். இவரின் மறைவிற்காக கடந்த 2026 மே 30ம் தேதியில் அஜித் சென்னை வந்தடைந்தார். பிறகு, மே 31ம் தேதியில் சென்னை பெசன்ட் நகரில் அஜித்தின் தாயாரின் இறுதிச்சடங்கு நடைபெற்றிருந்தது. தாயின் இறுதிச்சடங்கை முடித்த அஜித்ஜ், அவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுத்த காவலர்களுக்கு நன்றி சொன்னது தொடர்பான வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவந்தது.

இதையும் படிங்க: ஜன நாயகன் குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் – வைரலாகும் தகவல்

அந்த வகையில் மீண்டும் அஜித் குமார் துபாய் சென்று தனது கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கனத்த இதயத்துடன் அஜித் குமார் மீண்டும் பணியில் ஈடுபட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது அவரின் ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us