கமல் ஹாசன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் படம் 4 ஆண்டுகள் நிறைவடைந்தது
4 Years Of Vikram Movie | இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனதில் இருந்தே தொடர்ந்து தனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல் ஹாசன் என்றும் அவர் தனது ஆதர்சன குரு சினிமாவில் ஆர்வம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது அவர்தான் என்றும் பல இடங்களில் வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் கமல் ஹாசனின் ரசிகன் என்பதை மிகவும் பெருமையாகவும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கமல் மீது தீராக் காதல் கொண்டுள்ள லோகேஷ் கனகராஜிற்கு அவரை வைத்தே படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்தம் படம் எப்படி இருக்கும். ஆம் அப்படி லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல் ஹாசனை வைத்து இயக்கிய படம் தான் விக்ரம். இந்தப் படம் 40 ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் நீட்சியாக அமைந்து இருந்தது.
இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடிக்க நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நரேன், செம்பன் வினோத், காயத்ரி, சந்தான பாரதி, வசந்தி, இளங்கோ குமரவேல், ஸ்வதிஸ்டா கிருஷ்ணா, ஹரிஷ், கௌதம் சுந்தர்ராஜன், மாரிமுத்து, ரமேஷ் திலக், அருள்தாஸ், மைனா நந்தினி, ஷிவானி நாராயணன், மகேஷ்வரி மற்றும் ஸ்ரீ குமார் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




விக்ரம் படம் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது:
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா சார்பாக தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன்
மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் கடந்த 03-ம் தேதி ஜூன் மாதம் 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது விக்ரம் படம். கமல் ஹாசனின் நடிப்பில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் அதிக வரவேற்பைப் பெற்றப் படமாக இது மாறியது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்ததைப் படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது.
Also Read… Cocktail 2: ஒரே ஹீரோவை காதலிக்கும் இரு நடிகைகள்.. கலகலப்புடன் வெளியானது காக்டைல் 2 பட ட்ரெய்லர்!
விக்ரம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A landmark film
A lasting legacy
Celebrating 4 years of Vikram#4YearsofVikram #Vikram #KamalHaasan #VikramAllTimeRecord @ikamalhaasan @Dir_Lokesh @Udhaystalin @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasill @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @RedGiantMovies_… pic.twitter.com/3p7ksEtVlY— Raaj Kamal Films International (@RKFI) June 3, 2026
Also Read… விஸ்வாசம் அஜித் குமாரின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் – தயாரிப்பாளர் ஓபன் டாக்