Indrans: கருப்பு பட வெற்றி.. தனுஷின் டி55 படத்தில் நடிப்பதை உறுதி செய்த இந்திரன்ஸ்!
Indrans Joins Dhanushs D55: மலையாளம் சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்துவந்தவர் இந்திரன்ஸ். இவர் தொடர்ந்து தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் கருப்பு படத்தில் நடித்து எதிர்பார்க்காத வரவேற்பை பெற்ற நிலையில், தனுஷின் டி55 படத்தில் நடிப்பதை உறுதிசெய்துள்ளார்.
மலையாளம் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் இந்திரன்ஸ் (Indrans). இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் வெளியான நண்பன் (Nanban) படத்தில், சத்யராஜின் உதவியாளராக அந்த படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். மேலும் முழுமையாக மலையாளம் மொழியில் உருவாகும் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தமிழில் இவர் நடித்திருந்த படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தில் “மட்டஞ்சேரி சுகுமாரன்” என்ற வேடத்தில் நடித்திருந்தார். இதில் நடிகை அனகா மாயா ரவியின் தந்தையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
அதிலும் கருப்பு படத்தில், இந்திரன்ஸ் “எனக்கு கூகுள் பே பண்ண தெரியாது சாரே” என்று அவர் சொன்ன வசனம் திரையரங்கத்தையே கண்கலங்க வைத்தது. அவ்வாறு இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகியுள்ளது. இவர் தற்போது தமிழில் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். அது வேறு எந்த படமும் இல்லை, ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy)இயக்கத்தில் தனுஷ் (Dhanush) நடித்துவரும் டி55 (D55) படத்தில்தான்.
இதையும் படிங்க: LCU-வில் நுழைந்த மாஸ் ஹீரோ.. ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
தனுஷின் டி55 படத்தில் நடிப்பதை உறுதிசெய்த நடிகர் இந்திரன்ஸ்:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இந்திரன்ஸ் அதில், தமிழில் “சமீபத்தில் ராஜ்குமார் பெரியசாமி சார் என்னிடம் கால் பண்ணி பேசியிருந்தார். தனுஷ் சாரி டி55 படத்திற்காக, ஆனால் இன்னும் அந்த படத்தில் நடிக்க தொடங்கவில்லை” என அதில் அவர் கூறியிருந்தார். தனுஷின் டி55 படத்தில் மலையாளம் சினிமாவிலிருந்து ஏற்கனவே, நடிகர் மம்முட்டி நடித்துவரும் நிலையில், மேலும் இவருடன் நடிகர் இந்திரன்ஸ் இணையவுள்ளார்.
இதையும் படிங்க: கருப்பு படத்திலிருந்து வெளியானது ஆத்தி ராசாத்தி பாடல் வீடியோ
தனுஷின் டி55 படத்தில் இந்திரன்ஸ் நடிப்பது குறித்து வைரலாகும் பதிவு:
#Indran, who gained attention through #Karuppu starring #Suriya, recently revealed in an interview that he is also part of director Rajkumar Periasamy’s #D55 project.
The film’s shooting is currently underway in Chennai, where a massive forest-like set has been specially erected… pic.twitter.com/DY5HKRmABp
— Movie Tamil (@_MovieTamil) May 31, 2026
டி55 படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷ் நடித்துவருகிறார். மேலும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை தனுஷும் இணைந்து தயார்க்கிறார். இதில் சாய் பல்லவி, மம்முட்டி, மற்றும் ஸ்ரீலீலா போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துவருகின்றனர். மேலும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார். இவரின் இசையில் இப்படத்தில் மாஸ் பாடல்களும் தயாராகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.



