AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Benz Movie: LCU-வில் நுழைந்த மாஸ் ஹீரோ.. ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!

Ravi Mohan joins Benz Movie: தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமான நாயகனாக இருந்துவருபவர் ரவி மோகன். இவர் தற்போது மற்ற நடிகர்களின் படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். இந்நிலையில் ராகவா லாரன்ஸின் பென்ஸ் திரைப்படத்தில் இவர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Benz Movie: LCU-வில் நுழைந்த மாஸ் ஹீரோ.. ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
பென்ஸ் திரைப்படத்தில் இணைந்த ரவி மோகன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 31 May 2026 12:39 PM IST

இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் பென்ஸ் (Benz). இப்படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் (Bakkiyaraj Kannan) இயக்கிவரும் நிலையில், ராகவா லாரன்ஸ் அதிரடி நாயகனாக நடித்துவருகிறார். இப்படமானது லோகேஷ் கனகராஜின் LCU பட தொகுப்பில் ஒரு படமாக தயாராகிவருகிறது. ஏற்கனவே இந்த தொகுப்பில் கைதி, விக்ரம் மற்றும் லியோ போன்ற திரைப்படங்கள் இணைந்த நிலையில், 4வது படமாக பென்ஸ் தயாராகிவருகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence), நிவின் பாலி (Nivin Pauly) மற்றும் சம்யுக்தா மேனன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார்கள். அந்த வகையில் இப்படமானது ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

மேலும் இதில் ரவி மோகன் (Ravi Mohan) முக்கியமான வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், அதை படக்குழு உறுதிசெய்துள்ளது. பென்ஸ் படத்தில் ரவி மோகனும் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கருப்பு படத்திலிருந்து வெளியானது ஆத்தி ராசாத்தி பாடல் வீடியோ

பென்ஸ் படத்தில் ரவி மோகன் இணைந்தது குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகிறது. மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார். இவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் படமாக பென்ஸ் படம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படத்தொகுப்பில் 4வது படமாக உருவாகிவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க: ஜன நாயகன் பட ரிலீஸ் பிரச்சனை.. உண்மையை சொல்லுற அளவுக்கு தைரியம் இல்ல – இயக்குநர் எச்.வினோத்!

இப்படத்தில் நடிகர் நிவின் பாலி, “வால்டர்” என்ற ஒரு நெகட்டிவ் வேடத்தில் நடித்துவருகிறார். இவர் தமிழில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில், முழுமையான தமிழ் படமாக பென்ஸ் படம் அமைந்துள்ளது. இப்படமானது கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேல் தயாராகிவரும் நிலையில், 2026ம் ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். ஆனால் இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us