பிரதீப் ரங்கநாதனின் தயாரிப்பில் நடிகராக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.. கதாநாயகி இவர்தான்!
Pradeep Ranganathan Production Movie: தமிழ் மக்கள் மத்தியில் பேமஸ் இயக்குநர்களில் ஒருவர்தான் அஸ்வத் மாரிமுத்து. இவர் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார். இவர் அந்த படத்திலே சிறு வேடத்தில் நடித்திருந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனின் தயாரிப்பில் உருவாகிவரும் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் வெளியான ஹோ மை கடவுளே (Oh My Kadavule) என்ற படத்தை இயக்கி தமிழ் இயக்குநராக நுழைந்தவர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu). இப்படமானது இவருக்கு எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றிருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டுக்கும் மேலாக இவரின் இயக்கத்தில் எந்த படங்களும் வெளியாகவில்லை. இவ்வாறு மீண்டும் அவர் ரீ-என்ட்ரி கொடுத்த திரைப்படம்தான் டிராகன் (Dragon). இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நாயகனாக நடிக்க, அவருடன் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் (kayadu Lohar) உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் திரைப்படங்களில் நடிக்கும் ஆசை இவருக்கும் உண்டு.
அந்த விதத்தில் இவர் நாயகனாகவும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில், இவர் ரஜினி அல்லது சிலம்பரசனின் படத்தை இயக்க தயாராகிவருகிறாராம். இந்நிலையில் இவர் பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் புது படத்தில் நடிகராக முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.




இதையும் படிங்க: ஆகாஷ் முரளியின் 2-வது படத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜ் மோகன்
பிரதீப் ரங்கநாதனின் படத்தில் நடிகராக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து:
பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் மற்றும் நடிகராக பணியாற்றிவருகிறார். அந்த வகையில் தற்போது இவர், தயாரிப்பாளாராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இவர் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகை மமிதா பைஜூ லீட் நாயகியாக நடிக்கவுள்ளதாகவும், இதை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் இயங்குவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சூர்யா சார் கருப்பு படத்தை பார்க்கவே இல்லை – பகிர் விஷயத்தை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி
இந்நிலையில் இப்படத்தில்தான் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நடிக்கிறாராம். இதில் அஸ்வத் மாரிமுத்து, போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் புரோமோ வீடியோ ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. இந்த ஷூட்டிங்கில் அஸ்வத் மாரிமுத்து போலீஸ் உடையில் இருப்பதுபோன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படத்தின் ஷூட்டிங்கில் அஸ்வத் மாரிமுத்து இருக்கும் வீடியோ பதிவு:
Recent – Actor / Dir #PradeepRanganathan
Next Project Shooting…..
pic.twitter.com/MlH6fZ52jf— Movie Tamil (@_MovieTamil) May 30, 2026
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இறுதியாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்திருந்தார். இதை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்து, தனது இயக்கத்திலே பிரதீப் ரங்கநாதன் புது படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் புதிய படத்தை இவர் உருவாக்கிவருகிறாராம். இதில் மமிதா பைஜூ லீட் நாயகியாக நடிக்கவுள்ள நிலையில், ஹீரோ யார் என இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.