ஆகாஷ் முரளியின் 2-வது படத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜ் மோகன்
Atharva Murali Younger Brother Akash Murali Movie Updare: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த மறைந்த நடிகர் முரளியில் இரண்டாவது மகன் தான் நடிகர் ஆகாஷ் முரளி. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக உள்ளவர் முரளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் ரஜினி கமல் மற்றும் அஜித் விஜய் என இவர்கள் ஒரு பக்கம் போட்டும் போடும் நடிகராக இருந்தாலும் யாருடனும் போட்டிப் போடாமல் தனது அடுத்தடுத்தப் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுவதாக அமையும் வகையில் படங்களில் நடித்து வந்தார் முரளி. இவரை ஒருதலை காதலர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் தான் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் காதலை சொல்லாமலே தயங்கும் நபராக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிரபலமாக இருந்த இவர் சொந்த வாழ்க்கையில் காதல் திருமணம் செய்துக்கொண்டார் என்று ஒரு பேட்டியில் தெரிந்தபோது ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாரிசு நடிகர்கள் அறிமுகம் ஆனது போல முரளியின் மூத்த மகன் அதர்வா அவர் உயிருடன் இருக்கும் போதே சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து அதர்வா தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக இருந்து வரும் நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு முரளியின் இரண்டாவது மகனும் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகம் ஆன படம் நேசிப்பாயா. இயக்குநர் விஷ்ணு வரதன் எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.




ஆகாஷ் முரளியின் 2-வது படத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜ் மோகன்:
இந்த நிலையில் தற்போது ஆகாஷ் முரளியின் இரண்டாவது படம் தொடர்பான அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் ஹர்ஷவர்தன் எழுதி இயக்க உள்ள நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தினை நேற்று அமைச்சர் ராஜ் மோகன் தொடங்கி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… இன்று வெளியாகிறது பரிமளா & கோ படத்தின் ட்ரெய்லர்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
A fresh story, a young team, and a promising new beginning ✨🎬
Honourable Minister Mr. RajMohan @imrajmohan launches @Romeopictures_ Production No.9 starring @akashmurali, written & directed by @harshavarathan 📽️
Wishing this exciting cinematic journey a grand success ❤️… pic.twitter.com/jYQ2AUPeM6
— Ramesh Bala (@rameshlaus) May 29, 2026
Also Read… ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் கதை இதுதான் – இயக்குநர் ராஜேஷ் ஓபன் டாக்