AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : உயர்ந்த வேகத்தில் சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Reduced 30 Rupees Per Gram | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 சரிந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : உயர்ந்த வேகத்தில் சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jul 2026 10:35 AM IST

சென்னை, ஜூலை 16 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று (ஜூலை 15, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) உயர்வை சந்தித்த நிலையில், இன்று (ஜூலை 16, 2026) தங்கம் விலை சரிந்துள்ளது. அதாவது 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 சரிவை சந்தித்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்

ஈரான் போர் (Iran War) தொடங்கியது முதலே தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. 2026 ஜனவரி மாதம் அதிகபட்சமாக ரூ.16,000-க்கு மேல் தங்கம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், தற்போது ஜூலை மாதத்தில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக தங்கம் விலை நேற்று (ஜூலை 15, 2026) கிராமுக்கு ரூ.30 உயர்ந்த நிலையில், உயர்ந்த வேகத்தில் இன்று (ஜூலை 16, 2026) கிராமுக்கு ரூ.30 சரிந்துள்ளது.

இதையும் படிங்க : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.50 லட்சம் பெற எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,150-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : Gold Price : 10 நாட்களில் ரூ.4,400 குறைந்த தங்கம் விலை.. தொடர் சரிவுக்கு காரணம் என்ன?

தங்கம் விலை சரிவில் இருப்பது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றும், 2026 முடிவில் தங்கம் விலை உயரும் சூழல் உள்ளதால் இந்த விலை குறைவை பயன்படுத்தி முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும் என்று கணிப்புகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us