AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : 10 நாட்களில் ரூ.4,400 குறைந்த தங்கம் விலை.. தொடர் சரிவுக்கு காரணம் என்ன?

Gold Price Reduced 4400 Rupees In Just 10 Days | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,400 வரை குறைந்துள்ளது.

Gold Price : 10 நாட்களில் ரூ.4,400 குறைந்த தங்கம் விலை.. தொடர் சரிவுக்கு காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 14 Jul 2026 17:49 PM IST

பணவீக்கம், புவிசார் பதற்றம், பங்குச்சந்தை உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் ஜூன் மற்றும் ஜூலை இரண்டு மாதங்களாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,000 சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை இத்தகைய கடும் சரிவை சந்திக்க காரணம் என்ன, தற்போதைய தங்கம் விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் சரிவில் உள்ள தங்கம் விலை – காரணம் என்ன?

பொதுவாக உலக அளவில் ஏதேனும் போர் நடைபெறும்போது தங்கம் விலை உயர்வை சந்திக்கும். காரணம், புவிசார் பதற்றம் காரணமாக உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வர். ஆனால், ஈரான் போரில் அது தலைகீழாக மாறியுள்ளது. அதாவது, ஈரான் போரின் போது தங்கம் விலை பெரிய அளவில் மாற்றமில்லாமலும், சரிவையும் சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் அமெரிக்கா தான். ஈரானின் போது அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாக உலக முதலீட்டாளர்கள் அமெரிக்க வங்கியின் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். எனவே தான், தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதளம்.. விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

10 நாட்களில் ரூ.4,000 சரிந்த தங்கம் விலை

வ.எண்  தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
1 05 ஜூலை 2026 ரூ.13,700 ரூ.1,09,600
2 06 ஜூலை 2026 ரூ.13,560 ரூ.1,08,480
3 07 ஜூலை 2026 ரூ.13,400 ரூ.1,07,200
4 08 ஜூலை 2026 ரூ.13,250 ரூ.1,06,000
5 09 ஜூலை 2026 ரூ.13,320 ரூ.1,06,560
6 10 ஜூலை 2026 ரூ.13,350 ரூ.1,06,800
7 11 ஜூலை 2026 ரூ.13,300 ரூ.1,06,400
8 12 ஜூலை 2026 ரூ.13,300 ரூ.1,06,400
9 13 ஜூலை 2026 ரூ.13,200 ரூ.1,05,600
10 14 ஜூலை 2026 ரூ.13,150 ரூ.1,05,200

இதையும் படிங்க : EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?

ஜூலை 14, 2026 அன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவே, இன்று ஒரு கிராம் ரூ.13,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 10 நாட்களில் மொத்தம் ரூ.4,400 சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us