AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?

How To Check PF Interest In EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் 2026 - 2027 ஆம் நிதியாண்டுக்கான வட்டியை அறிவித்துள்ளது. ஜூலை 15, 2026-க்குள் இது ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Jul 2026 11:24 AM IST

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization), 2026 – 2027 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டு கடைபிடிக்கப்பட்டதை போலவே இந்த நிதியாண்டும் வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக வைத்திருக்க இபிஎஃப்ஓ முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், ஜூலை 15, 2026-க்குள் ஊழியர்களின் பிஎஃப் (PF – Provident Fund) வட்டி விகிதம் வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிஎஃப் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் பணத்திற்கு வட்டி வழங்கும் இபிஎஃப்ஓ

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்களின் பெயர்களில் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும். இந்த தொகையை ஊழியர்கள் தங்களது தேவைகளுக்காக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஒருவேளை ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்கவில்லை என்றால் அதற்கு அரசு வட்டி வழங்கும்.

இதையும் படிங்க : கடும் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய்.. பெட்ரோல், டீசல் விலையில் தாக்கம் ஏற்படுமா?

பிஎஃப் வட்டி வரவு – செக் செய்வது எப்படி?

  1. முதலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் https://www.epfindia.gov.in/site_en/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. இந்த இணையதளத்தில் பயனர்கள் தங்களது யுஏஎன் எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிட்டு உள்ளே நுழைய வேண்டும்.
  3. உள்ளே சென்ற பிறகு e Passbook என்று ஒரு ஆப்ஷன் தோன்றும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  4. அதில் உங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : இனி பத்திரப்பதிவு செய்ய அலைய வேண்டாம்.. வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமே செய்யலாம்.. விரைவில் அமலுக்கு வருது!

இந்த இ பாஸ்புக்கில் ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கு இருப்பு குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துக்கொள்ளலாம். ஜூலை 15, 2026-க்குள் பிஎஃப் வட்டி தொகையை வரவு வைக்க இபிஎஃப்ஓ திட்டமிட்டுள்ள நிலையில், பயனர்கள் இந்த முறையை பின்பற்றி தங்களது பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

Follow Us