AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி வாட்ஸ்அப் காபி, ஸ்கிரீன்ஷாட் ஆகியவை செல்லாது.. பயணிகளுக்கு இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Indian Railway Important Announcement | இந்தியர்கள் மத்தியில் ரயில் போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ளது. இந்த நிலையில், முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணம் செய்பவர்களுக்கான சில புதிய விதிகளை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி வாட்ஸ்அப் காபி, ஸ்கிரீன்ஷாட் ஆகியவை செல்லாது.. பயணிகளுக்கு இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Jul 2026 12:36 PM IST

இந்திய பொதுமக்கள் மத்தியில் ரயில் போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் தான், ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே (Indian Railway) மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பில் (WhatsApp) அல்லது ஸ்கிரீன்ஷாட்டாக (Screenshot) ரயில் டிக்கெட்டுகளை காட்டுவது இனி செல்லாது என அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள இந்த முக்கிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி இவையெல்லாம் செல்லாது – இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு

முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை சரிபார்க்கும் முறையில் ரயில்வே நிர்வாகம் சில புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.

  • ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் இனி ரயில் ஒன் (RailOne) போன்ற அதிகாரப்பூர்வ ரயில்வே செயலிகளின் வாயிலாக மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை காண்பிக்க வேண்டும்.
  • டிக்கெட் பரிசோதகர் கேட்கும்போது உங்கள் ஸ்மார்ட்போனில் ரயில் ஒன் செயலியை திறந்து அதில் பயணிகள் அவர்களது டிக்கெட்டை காண்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
  • Original Digital Ticket என அழைக்கப்படும் ரயில்வே நிர்வாகம் இப்படி காட்டப்படும் ரயில் டிக்கெட்டுகள் மட்டுமே செல்லும் என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : இனி பத்திரப்பதிவு செய்ய அலைய வேண்டாம்.. வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமே செய்யலாம்.. விரைவில் அமலுக்கு வருது!

இனி இந்த வகைகளில் டிக்கெட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது

  • டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட்
  • வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட டிக்கெட் நகல்கள்
  • புகைப்படங்கள்

மேற்குறிப்பிட்ட இந்த விஷயங்களை ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் இனி ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Gold Price : 3 நாட்களில் ரூ.3,000 குறைந்த தங்கம் விலை.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?

இதுதவிர டிக்கெட் பதிவு செய்த அதே எண்ணில், அதே செயலில் டிக்கெட் இருக்க வேண்டும். வேறு ஒருவர் டிக்கெட் எடுத்து அதனை ஸ்கிரீன்ஷாட் செய்து அனுப்புவதோ அல்லது நகல் அனுப்புவதோ கூடாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே ரயில் பயணிகள் இனி இவற்றை கருத்தில் கொண்டு ரயிலில் பயணம செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us