AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆறாத வடு கரூர் சம்பவம்!”.. முதல்வர் விஜய் ஆவேச பேச்சு!!

அரசியல் களத்திற்கு நான் வந்த பிறகு, என் வாழ்நாளில் நான் சந்தித்த மிகப்பெரிய துயரமும், எனக்குள் ஆறாத வடுவாக மாறியதும் இந்த கரூர் சம்பவம்தான். இதில் உயிரிழந்தவர்கள் வெறும் தொண்டர்களோ அல்லது பொதுமக்களோ அல்ல; அவர்கள் என் சொந்தக் குடும்ப உறுப்பினர்கள். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களின் வலியை நான் நன்றாக உணர்வேன் என்றார்.

“என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆறாத வடு கரூர் சம்பவம்!”.. முதல்வர் விஜய் ஆவேச பேச்சு!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 Jul 2026 13:09 PM IST

கரூர், ஜூலை 10: “என் நெஞ்சை உலுக்கி, எனக்கு அளவிட முடியாத வலியையும் வேதனையையும் தந்த சம்பவம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்” எனத் தமிழக முதலமைச்சர் விஜய் கரூரில் நடைபெற்ற நிகழ்வில் உருக்கமாகப் பேசியுள்ளார். கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சி மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் நடந்து 287 நாட்கள் கழித்து தமிழக முதல்வராக விஜய் இன்று கரூர் சென்றார். அப்போது அவர் பேசியதாவது, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் சில வழிகளையும் காயங்களையும் மறக்க முடியாது. என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட மிகப்பெரிய வலியையும் காயத்தையும் தந்தது இந்த கரூர் சம்பவம்தான்.

இதையும் படிக்க: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கத் தடையில்லை.. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

மக்களைச் சந்தித்துப் பிரச்சினைகளைப் பேசுவதற்காக திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல் எனப் பயணம் செய்தோம். அரியலூர் கூட்டம் முடிந்து பெரம்பலூர் செல்லும் போது, அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதாகப் பெரம்பலூர் போலீசார் எங்களை எச்சரித்தனர். மக்களின் பாதுகாப்பைக் கருதி நாங்கள் அங்கு செல்லாமல் திரும்பி, மக்களிடம் மன்னிப்பும் கேட்டோம்” என்று நினைவு கூர்ந்தார்.

அன்று போலீஸ் நடத்திய நாடகம்:

ஆனால், நாமக்கல் முடித்து கரூர் வந்தபோது இங்கிருந்த போலீசார் எங்களை ஏன் எச்சரிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பிய அவர், கூட்டம் கட்டுப்பாட்டை மீறுகிறது என்று தெரிந்தால் கூட்டத்தை ரத்து செய்ய போலீசாருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதைச் செய்யாமல், நெடுஞ்சாலையில் (ஹைவே) இருந்த அந்தப் பகுதிக்கு எங்களை போலீசாரே முன்னின்று கூட்டிச் சென்றார்கள். அதன் பின்னணியில் ஒரு பெரிய நாடகமே நடந்துள்ளது. அன்று அதை அறியாமல் நான் கரூரில் போலீசாருக்கு நன்றியெல்லாம் கூறினேன்” என்று குற்றம் சாட்டினார்.

யார் கொடுத்து பிரஷர் இது..?:

இப்படி ஒரு விபத்து நடப்பதற்குக் காரணமான அறிவுறுத்தல்களைக் கொடுத்து, போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பிய விஜய், “இவ்வளவு பெரிய துயரம் நடந்த பின், அதன் வலியோடு வீட்டில் இருந்த என்னை ‘ஓடி ஒளிந்துவிட்டான்’ என்று ஏளனமாகப் பேசினார்கள். அங்கு வந்த கூட்டத்திற்குத் தகுந்த பாதுகாப்பை போலீசார் கொடுத்தார்களா?” என்று வினவினார்.

மேலும், “சம்பவ இடத்தைத் தேர்வு செய்தது நாங்கள்தான் என்று ஒரு போலீஸ் அதிகாரி பேட்டி கொடுக்கிறார். இவ்வளவு காயங்களை ஏற்படுத்திவிட்டு, பழியை என் மீது போட்டு அரசியல் ஆதாயம் தேடினார்கள். சட்டசபையில வாய் கூசாமல் ஸ்டாலின் சார் பழியை என் மீது திருப்பிவிட்டு அரசியல் செய்தார்” என்று அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மீது நேரடியாகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து நெகிழ்ச்சி:

விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து உருக்கமாகப் பேசிய அவர், “டிவியில் என் படம் வந்தால் ‘விஜய் மாமா’ என்று திரையைத் தொட்டு முத்தம் கொடுத்த என் அக்கா, தங்கைகளின் குழந்தைகளை, பச்சைப் பிள்ளைகளை, என் குடும்ப உறவுகளை நான் அங்கே இழந்திருக்கிறேன்” என்று கண் கலங்கினார்.

“ஓடவும் மாட்டேன்.. ஒழியவும் மாட்டேன்”:

“இப்படியெல்லாம் நெருக்கடி கொடுத்தால் மக்களை விட்டு ஓடிவிடுவேன் என்று நினைத்தார்கள். யார் என்ன சொன்னாலும் நான் மக்களை விட்டு ஓட மாட்டேன். பணமா, ஜனமா என்று கேட்டால் எனக்கு என் ஜனம்தான் முக்கியம். நான் ஆதாயம் தேடும் அரசியல்வாதி இல்லை. எனக்காக எல்லாவற்றையும் கொடுத்த என் மக்களுக்காக, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய்.

இதையும் படிக்க: 287 நாட்களுக்குப் பின் கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. இவர்களுக்கு மட்டுமே அனுமதி.. அதிரடி பாதுகாப்பு நெறிமுறைகள்!!

நமக்கு இத்தனை வழிகளைக் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் நீங்கள் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால் அதுமட்டும் போதாது, கால காலத்திற்கும் அவர்கள் எழுந்திருக்க முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடியை நீங்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Follow Us