AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஓடு ஓடு ஓடு.. வரான் பாரு வேட்டைக்காரன்!”.. பாட்டு பாடி திமுகவை வறுத்தெடுத்த முதல்வர் விஜய்!!

கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் "வரான் பாரு வேட்டைக்காரன்" எனத் தன் படப் பாடலைப் பாடி திமுகவை வறுத்தெடுத்தார் முதலமைச்சர் விஜய். தப்பியோடும் திமுக புள்ளிகளைக் கடுமையாக விமர்சித்தவர், லஞ்சத்திற்கு எதிராக மக்கள் தன் பெயரைப் பயன்படுத்தி தைரியமாகப் பதிலளிக்கலாம் என்றும் அதிரடியாக முழங்கினார்.

“ஓடு ஓடு ஓடு.. வரான் பாரு வேட்டைக்காரன்!”.. பாட்டு பாடி திமுகவை வறுத்தெடுத்த முதல்வர் விஜய்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 Jul 2026 14:20 PM IST

கரூர், ஜூலை 10: கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சியான திமுகவை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடி உரையாற்றினார். குறிப்பாக, இந்த நிகழ்வில் கரூர் மக்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய், “கரூரில் தவெக சார்பில் ஒரு பிரம்மாண்ட நினைவுச் சின்னம் அமைக்கப்படும்” என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேடையில் தியேட்டர் பாணியில் பாட்டுப் பாடியும், கிண்டலாகப் பேசியும் அவர் ஆற்றிய அதிரடி உரையின் செய்தித் தொகுப்பை இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க: சட்டசபையில் ஓட்டம் பிடித்தது யார்?.. “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல!”.. கரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!!

“ஓடு ஓடு ஓடு… வரான் பாரு வேட்டைக்காரன்!”

திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகளைக் குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், “இந்தத் திருட்டு திமுக ஆட்சியை வச்சுக்கிட்டு ஊரடிச்சு உலையில போட்டு கொள்ளையடிச்சதுனாலதான், உங்க கரூர் கம்பெனி ஓனர் ஒருத்தர் எங்க இருக்காருன்னே தெரியாம ஓடிட்டே இருக்காரு” என்று சாடினார். தொடர்ந்து, தனது ‘வேட்டைக்காரன்’ படப் பாடலான “ஓடு ஓடு ஓடு ஓடு… வரான் பாரு வேட்டைக்காரன்” என்ற வரிகளை மேடையில் பாடி ரசிகர்களின் கரகோஷத்தால் அரங்கை அதிரச் செய்தார். மேலும், “இன்னொருத்தர் பாரினில் போய் ஒளிந்துகொண்டார். அவர் சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றவர்; இன்னும் தோண்டத் தோண்ட எத்தனை பேர் மாட்டப் போகிறார்களோ தெரியவில்லை” என்றும் குறிப்பிட்டார். (அதே சமயம், “வெளிநாட்டில் ஒளிந்திருப்பது ஸ்டாலின் சார் இல்லை, எனக்கு எப்போதும் ஸ்டாலின் சார் மீது ஒரு தனி பாசம் உண்டு” என்றும் தெளிவுபடுத்தினார்).

“லஞ்சம் கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கள்”

பொதுமக்களுக்கு தைரியம் ஊட்டும் வகையில் பேசிய அவர், “உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள், நான் உங்களோடு இருக்கிறேன். யாராவது உங்களை வற்புறுத்தினால், ‘இது எங்க மகன், எங்க புள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜயோட ஆட்சி’ என்று ஸ்ட்ராங்காகச் சொல்லுங்கள். மக்கள் நீங்கள் கூட இருக்கும்போது லஞ்ச ஊழல் மட்டுமல்ல, அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடும் யாராக இருந்தாலும் அடங்கிவிடுவார்கள்” என்று முழங்கினார்.

கொள்கை இழந்த கட்சிகள்:

“கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று ஒரு காலத்தில் கொள்கையோடு இருந்த கட்சிகள் எல்லாம் இன்றைக்கு எப்படிப் போய்விட்டன என்று உங்களுக்கே தெரியும்” என்று திமுகவின் தற்போதைய நிலையை விமர்சித்தார். மேலும், “தவெக தலைவரான இந்த விஜயை எதிர்க்க உங்களுக்கு ஒரு அரசியல் நியாயம் இருக்கிறது. ஏன்னென்றால் உங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு, ஊழல் லஞ்சம் செய்ய விடாமல் உங்கள் அரசியலைத் தெருமுனைக்குக் கொண்டு வந்து நிறுத்தியாச்சு; மக்களும் விஜயைத்தான் நம்புகிறார்கள்” என்றார்.

“இன்னும் கனவிலேயே இருக்காதீங்க”

திமுகவினர் இன்னமும் தங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க முயல்வதைச் சுட்டிக்காட்டிய விஜய், “மக்கள் ஓட்டுப் போட்டு என்னை முதலமைச்சராக உட்கார வைத்துள்ளனர். ஆனால், இன்னமும் நீங்கள்தான் ஆட்சியில் இருப்பது போல விஜய் கரூருக்குப் போகக் கூடாது, அங்கே போகக் கூடாது என்று கட்டுப்பாடுகளையும், SOP-களையும் (Standard Operating Procedures) போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஸ்டாலின் சார், இன்னும் கனவிலேயே இருக்கிறீர்களா? முதல்ல முழிச்சு ரியாலிட்டிக்கு வாங்க! உங்க ஆட்சி எல்லாம் வீட்டுக்குப் போய், டிவிக்கே ஆட்சி வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது” என்று கூறினார்.

இதையும் படிக்க: “என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆறாத வடு கரூர் சம்பவம்!”.. முதல்வர் விஜய் ஆவேச பேச்சு!!

புதிய நினைவுச் சின்னம் – சர்ப்ரைஸ் அறிவிப்பு:

தொடர்ந்து, கரூர் மக்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் விஜய், “நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தையும், நமக்கு எதிராக நடந்த சதி மற்றும் சூழ்ச்சிகளையும் எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். இனிமேல் யாரும் அரசியல் சதியோ, சூழ்ச்சியோ செய்ய யோசிக்கக் கூடக் கூடாது என்பதற்காக, கரூரில் தவிக சார்பில் ஒரு பிரம்மாண்ட நினைவுச் சின்னம் அமைக்கப்படும்” என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

Follow Us