AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாய் பல்லவி குறித்து தவறாக பரவும் தகவல் – வைரலாகும் வீடியோ

fake news about Actress Sai Pallavi | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி குறித்து இணையத்தில் ஒரு தவறான செய்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி குறித்து தவறாக பரவும் தகவல் – வைரலாகும் வீடியோ
சாய் பல்லவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jul 2026 14:44 PM IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை சாய் பல்லவி. இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் மலையாள சினிமாவில் வெளியகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற பிரேமம் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் மூன்று நாயகிகள் நடித்து இருந்தாலும் சாய் பல்லவியின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆகி பிசியான நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து தென் இந்திய மொழிகளில் ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகை சாய் பல்லவி தற்போது இந்தி மொழியிலும் நடித்து வருகிறார்.

அதன்படி இந்தி மொழியில் சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் ஏக் தீன் என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் அடுத்ததாக நடிகர் ரன்பீர் கபூர் உடன் இணைந்து நடிகை சாய் பல்லவி ராமாயணா படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரன்பீர் கபூர் ராமராக நடித்து வரும் நிலையில் நடிகை சாய் பல்லவி சீதாவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

சாய் பல்லவி குறித்து தவறாக பரவும் தகவல்:

முத்தக் காட்சிகள் அல்லது நெருக்கமான காட்சிகளில் நடிக்காதது தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சார்ந்த முடிவு என்று சாய் பல்லவி எப்போதும் கூறி வந்துள்ளார். காதலர்கள், கார்கள், வீடுகள் மற்றும் அது போன்ற பிற விஷயங்கள் குறித்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. அவை அவர் கூறியதாகத் தவறாகப் பரப்பப்பட்டுள்ளன. அத்தகைய கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என்பதை நேர்காணலை நடத்தியவரே தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தத் தகவல் முதலில் ஒரு எக்ஸ் கணக்கிலிருந்து உருவானதாகத் தெரிகிறது. தற்போது இது மற்றொரு நடிகையுடன் தேவையற்ற ஒப்பீடுகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நடிகைகளுடன் தன்னை ஒப்பிடுவதை விரும்புவதில்லை என்பதை சாய் பல்லவி தெளிவாகக் கூறியுள்ளார்.

Also Read… வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா… 16 ஆண்டுகளைக் கடந்தது மதராசப்பட்டினம் படம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தள்ளி போகிறதா அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்

Follow Us