AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தள்ளி போகிறதா அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்

Raaka movie release may be postponed to 2028 | இயக்குநர் அட்லி குமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து உள்ள ராக்கா படத்தின் வெளியீடு தள்ளிபோக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

தள்ளி போகிறதா அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்
ராக்காImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jul 2026 17:25 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த இயக்குநர் அட்லி தற்போது பான் இந்திய அளவில் பிரபலமாக உள்ள நடிகர்களின் படங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வந்த இயக்குநர் அட்லி குமார் இறுதியாக இந்தி சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை எழுதி இயக்கினார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது டோலிவுட் பக்கம் காலடி எடுத்து வைத்தார் இயக்குநர் அட்லி குமார். அதன்படி இயக்குநர் அட்லி குமார் நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லி குமார் இணைந்து உள்ள இந்தப் படத்திற்கு ராக்கா என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார். தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தள்ளி போகிறதா அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் ரிலீஸ்?

ராக்கா திரைப்படம் 2028-ஆம் ஆண்டிற்கு வெளியீடு ஒத்திவைக்கப்படலாம் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. சர்வதேசத் தரத்திலான ஒரு திரைப்படத்தை உருவாக்க அட்லி உறுதியாக உள்ளார்; அதேவேளையில், படப்பிடிப்பின் சில பகுதிகள் மற்றும் கணிசமான அளவிலான VFX/CGI பணிகள் இன்னும் மீதமுள்ளன. மேலும், தீபிகா படுகோன் நடிப்பிலிருந்து நான்கு மாதங்கள் இடைவெளி எடுக்கவுள்ளார். இத்திரைப்படம் பேர்லல் யுனிவர்ஸ் சார்ந்த ஒரு அறிவியல் புனைகதை (sci-fi) வகையைச் சேர்ந்த பொழுதுபோக்குத் திரைப்படமாகும்.

Also Read… இதுதான் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதியா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இயக்குநரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்ட சுப்ரமணியபுரம் நடிகை சுவாதி ரெட்டி – வைரலாகும் போட்டோஸ்

Follow Us