AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்த மாதிரி படம் பண்ண முடியலைனு ரொம்ப நாள் வருத்தமாக இருக்கு… அட்லி ஓபன் டாக்

Director Atlee Kumar talks about love movie | தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த அட்லி குமார் தற்போது பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக மாறி உள்ளார் இயக்குநர் அட்லி குமார். இவர் ரொமாண்டிக் ட்ராமா படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த மாதிரி படம் பண்ண முடியலைனு ரொம்ப நாள் வருத்தமாக இருக்கு… அட்லி ஓபன் டாக்
அட்லி குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jul 2026 10:27 AM IST

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் அட்லி குமார். இவர் பிரமாண்ட இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து ராஜா ராணி படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆன போதே ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றார் அட்லி. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மூன்று படங்கள் நடிகர் தளபதி விஜயை வைத்து படத்தை இயக்கினார். அதன்படி தெரி, மெர்சல் மற்றும் பிகில் என நடிகர் தளபதி விஜயை வைத்து ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த இயக்குநர் அட்லி குமார் கோலிவுட் சினிமாவில் இருந்து பாலிவுட் சினிமாவில் படத்தை இயக்க சென்றார். அதன்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார்.

இந்தப் படம் பாலிவுட் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது வசூலில். மேலும் இந்தப் படம் தான் நடிகர் ஷாருக்கானுக்கு தேசிய விருதை வென்று கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ராக்க என்ற படத்தை மிகவும் பிரமாண்டமான பொருட் செலவில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இதயம் முரளி பட விழாவில் கலந்து கொண்டு அட்லி குமார் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதுதான் என் அடையாளமாக நான் நினைத்தேன்:

ராஜா ராணிக்குப் பிறகு என்னால் ஒரு காதல் கதையம்சம் கொண்ட படத்தை செய்ய முடியவில்லை; அதுதான் எனது அடையாளம். அதன்பிறகு தளபதியுடன் தெறி, மெர்சல், மற்றும் பிகில் ஆகிய படங்கள் அமைந்தன. சரி, இப்போது எதற்குத் தேவையில்லாத சுய பெருமை? எனக்கு ‘இதயம் முரளி’ படம் மிகவும் பிடித்திருந்தது. இது ஆகாஷின் வாழ்க்கை வரலாறு சார்ந்த படம். ஆகாஷைப் பொறுத்தவரை, அந்தப் படத்தில் வரும் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரத்தைப் போன்ற ஒரு நிலையில் நான் இருக்கிறேன். நான் அதர்வாவின் தீவிர ரசிகன். உங்களின் மிகச்சிறந்த படத்திற்காகக் காத்திருக்கிறேன். இந்தப் படம் நிச்சயம் ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்று நான் கருதுகிறேன் என்றும் அட்லி குமார் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… 40 வருஷத்துக்கு முன்னாடி டெய்லரா வந்தேன்… கருப்பு பட வெற்றிக் குறித்து எமோஷ்னலாக பேசிய நடிகர் இந்திரன்

இணையத்தில் வைரலாகும் அட்லி பேசிய வீடியோ:

Also Read… எனக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளுக்கும் ரவிமோகன் சார்தான் காரணம் – பிரதீப் ரங்கநாதன்

Follow Us