OTT Movie: மெய்யழகன் போலவே எமோஷ்னலான படம்.. ஹக் ஜாக்மேன் நடித்த தி ஷீப் டிடெக்ட்டிவ்ஸ் படத்தை பார்த்திருக்கீங்களா?
Watch The Sheep Detectives: தற்போது இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், நமது மனத்தை சாந்தப்படுத்துவது சினிமா திரைப்படங்களே. அந்த வகையில் குடும்பத்துடன் பார்க்கும் பீல் குட் படங்கள் பல ஓடிடியில் இருக்கிறது. வுல்வரின் ஹக் ஜாக்மேன் நடித்த, தி ஷீப் டிடெக்டிவ் படத்தை பார்த்திருக்கீங்களா?. இதை கட்டாயம் பாருங்க.
விறுவிறுப்பான வேலை நாட்களை கடந்து, தங்களின் மனதை மிருதுவாக்குவதற்கு பலரும் செனிமா திரைப்படங்களை தேடுவது உண்டு. தற்போது ஓடிடியிலே (OTT Movies) பல பீல் குட் திரைப்படங்கள் இருக்கும் நிலையில், தங்களின் விடுமுறை நாட்களில் மக்கள் திரைப்படங்களை வீட்டிலிருந்தபடியே நேரடியாக ஓடிடி தளங்களில் பார்த்துவிடுகிறார்கள். அந்த வகையில் குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்கு பீல் குட், எமோஷனல் மற்றும் துப்பறிவு போன்ற கதைக்களத்துடன் இருக்கும் “தி ஷீப் டிடெக்ட்டிவ்ஸ்” (The Sheep Detectives) படத்தை பார்த்திருக்கீங்களா?. மார்வெல் வுல்வரின் (Wolverine) என்ற கதாபாத்திரத்தின் மூலமாக ஒட்டுமொத்த உலக புகழ்பெற்றவர் நடிகர் ஹக் ஜாக்மேன் (Hugh Jackman). இவர் பல ஹாலிவுட் படங்களில் நடித்திருந்தகளும், மக்கள் மத்தியில் இவருக்கு மறக்கமுடியாத பிரபலத்தை கொடுத்தது வுல்வரின் கதாபாத்திரமே.
நடிகர் ஹக் ஜாக்மேன் நடிப்பில் தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ள படம்தான் தி ஷீப் டிடெக்ட்டிவ்ஸ். இப்படம் எந்த ஓடிடியில் உள்ளது?, யாரெல்லாம் பார்க்கலாமா? மற்றும் இப்படத்தின் விமர்சனங்கள் குறித்து முழுமையாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: சிறுத்தை படத்தில் நடித்த சிறுமியா இது.. இப்போ ஆளே மாறிட்டாங்க பாருங்களே!




தி ஷீப் டிடெக்ட்டிவ்ஸ் படத்தின் கதை என்ன.. மெய்யழகன் படத்தை மிஞ்சியதா? :
இந்த தி ஷீப் டிடெக்ட்டிவ்ஸ் படத்தில் நடிகர் ஹக் ஜாக்மேன், “ஜார்ஜ் ஹார்டி” என்ற ஆடு பண்ணை வைத்திருப்பவராக இருக்கிறார். இவர் வைத்திருக்கும் ஆட்டு மந்தையிலும், கோடைகாலத்தில் பிறந்த ஆடுகள் மற்றும் குளிர்காலத்தில் பிறந்த ஆடுகள் என தனி பிரிவு இருக்கிறது. இந்த ஆடுகளை சிறப்பாக பராமரித்துவரும் ஜார்ஜ் ஹார்டி திடீரென இறந்துவிடுகிறார். இவரின் இறப்பில் சந்தேகம் இருக்கும் நிலையில், அவர் வளர்க்கும் ஆடுகள் அவர் இறக்க காரணம் யார் என கண்டறிய துடிக்கின்றன.
இதையும் படிங்க: தமிழ் டப்பிங்ல இருக்க இந்த அமெரிக்கன் படத்தை மிஸ் செய்யாதீர்கள்… வாய்ஸ் மெயில் ஃபார் இசபெல்லா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
ஜார்ஜ் ஹார்டியை கொன்ற கொலையாளி யார்? ஆடுகள் எத்தனை கஷ்டங்களை கடந்து கொலையாளிகளை கண்டுபிடிக்கின்றன மற்றும் அந்த ஆடுகளுக்கு இடையே இருக்கும் எமோஷனல் கனெக்ஷன் குறித்த கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த படத்திலும் செபாஸ்டியன் என்ற ஆட்டின் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தி ஷீப் டிடெக்ட்டிவ்ஸ் பட தமிழ் ட்ரெய்லர் குறித்த பதிவு:
தி ஷீப் டிடெக்ட்டிவ்ஸ் படம் எந்த ஓடிடியில் உள்ளது:
ஹக் ஜாக்மேன் நடித்த தி ஷீப் டிடெக்ட்டிவ்ஸ் திரைப்படமானது அமேசான் பிரைம் ஓடிடியில் இருக்கிறது. இந்த படமானது தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் என இந்திய மொழியிலும் கிடைக்கிறது. 1 மணி நேரமும் 49 நிமிடங்களும் கொண்ட இப்படமானது குடும்பத்துடன் பார்ப்பதற்கு மிகவும் சிறப்பான படமாகும், கட்டாயமாக பாருங்க.