தமிழ் டப்பிங்ல இருக்க இந்த அமெரிக்கன் படத்தை மிஸ் செய்யாதீர்கள்… வாய்ஸ் மெயில் ஃபார் இசபெல்லா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Voicemails for Isabelle Movie OTT Update | அமெரிக்கன் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது வாய்ஸ் மெயில் ஃபார் இசபெல்லா படம். இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அன்பிற்கு மொழி தேவையில்லை என்றாலும் அது எந்த மொழியில் உருவாகி இருந்தாலும் அதனை கொண்டாட மக்கள் தவறியதில்லை. அப்படி அமெரிக்கன் ரொமாண்டிக் காமெடி பாணியில் ஆங்கில மொழியில் உருவான படம் தான் வாய்ஸ் மெயில் ஃபார் இசபெல்லா. இந்தப் படத்தை இயக்குநர் லியா மெக்கெண்ட்ரிக் எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் என இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வாய்ஸ் மெயில் ஃபார் இசபெல்லா படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் கடந்த 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
மேலும் இந்தப் படத்தில் நடிகை ஸோயி டாய்ட்ஷ் நாயகியாக நடித்து உள்ள நிலையில் நடிகர் நிக் ராபின்சன் நாயகனாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து இந்த வாய்ஸ் மெயில் ஃபார் இசபெல்லா படத்தில் நடிகர்கள் ஹாரி ஷம் ஜூனியர், லூகாஸ் கேஜ், சியாரா பிராவோ, நிக் ஆஃபர்மேன், மேகன் டான்சோ, கில் பெல்லோஸ், டானிஸ் டோல்மன், டோபி சாண்டேமன் மற்றும் ஸ்பென்சர் லார்ட் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
வாய்ஸ் மெயில் ஃபார் இசபெல்லா படத்தின் கதை என்ன?
ஜில் ஷா மற்றும் இசபெல் ஷா இருவரும் அக்கா தங்கை ஆவர். இதில் தங்கை இசபெல்லாவிற்கு சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் நோய் இருக்கும். பொதுவாக இந்த நோய் உள்ளவர்கள் செயற்கை ஆக்ஜிசன் சிலிண்டருடனே உயிர் வாழ்வார்கள். அவர்களால் மற்றவர்களை போல சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது. இப்படி இருக்கும் சூழலில் அக்கா ஜில் ஷா வெளி உலக வாழ்க்கை குறித்து குழந்தையாக இருக்கும் போது இருந்தே ஒவ்வொரு அனுபவமாக கூறி வருகிறார்.




ஜில் ஷா மற்றும் இசபெல் ஷா இருவரும் அக்கா தங்கை மட்டும் இல்லாமல் பெஸ்ஃப் ஃப்ரன்ஸ் ஆவார்கள். இப்படி இருக்கும் சூழலில் ஜில் ஒரு பெரிய செஃப் ஆவதற்காக தனது தங்கை மற்றும் குடும்பத்தை விட்டு வெளியே சென்று வாழ்கிறார். அப்படி வாழ்ந்து வரும் போது தனது தங்கையிடம் மொபைல் வழியாக அனைத்தையும் கூறி வருகிறர். அப்படி பேச முடியாத நேரங்களில் வாய்ஸ் மெயில் அனுப்புவது இருவருக்கும் வழக்கமாக உள்ளது.
Also Read… நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்திலிருந்து வெளியானது லேடிஸ் & லேடிஸ் வீடியோ
இப்படி இருக்கும் சூழலில் இசபெல்லின் திடீர் மரணத்திற்குப் பிறகு அக்கா ஜில் தொடர்ந்து இசபெல்லாவின் மொபைல் போனிற்கு தொடர்ந்து வாய்ஸ் மெயில்களை அனுப்பி வருகிறார். அது தனது தங்கையிடம் பேசுவது போல இருப்பதால் தொடர்ந்து அதனை செய்து வருகிறார். இந்த நிலையில் உயிரிழந்த இசபெல்லின் மொபைல் நம்பர் நாயகனுக்கு கிடைக்கிறது. அதன் பிறகு அந்த வாய்ஸ் மெயில்கள் அனைத்தையும் நாயகன் வெஸ் கேட்டு கேட்டு ஜில் மீது காதல் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படதின் கதை.
Also Read… படப்பிடிப்பை நிறைவு செய்தது மொத ராத்திரி டீம் – வைரலாகும் போஸ்ட்