படப்பிடிப்பை நிறைவு செய்தது மொத ராத்திரி டீம் – வைரலாகும் போஸ்ட்
Modha Rathiri movie shooting wrapped up | தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் புதுப் புதுப் படங்களும் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில் மொத ராத்திரி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் பல கதாப்பாத்திர நடிகர்களை பார்த்து நமக்கு தோன்றும் நல்ல நடிகர் ஆனா இன்னும் அவங்களுக்கான சரியா வாய்ப்பு அமையவில்லை என்று. பான் இந்திய மொழிகளில் பல நடிகர்கள் அப்படி இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு 20 நொடி காட்சி படத்தில் கொடுத்து இருந்தாலும் சரி இரண்டு மணி நேர காட்சி கொடுத்தாலும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காது. சிலருக்கு உடனே அமையும் சிலருக்கு சில ஆண்டுகள் பிறகு பலருக்கு அமையவே அமையாமலும் போயிருக்கு. அப்படி தமிழ் சினிமாவில் இவர் ஒரு நல்ல நடிகர் ஆனால் இன்னும் சரியான வாய்ப்பு இவருக்கு அமையவில்லை என்று பார்த்தால் ரசிகர்களுக்கு தோன்றும் நடிகர் ரிஷிகாந்த்.
இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்தி மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் மற்றும் இணையதள தொடர்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக தற்போது நடித்து உள்ள படம் மொத ராத்திரி. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது.




படப்பிடிப்பை நிறைவு செய்தது மொத ராத்திரி டீம்:
இயக்குநர் ராஜா கருப்புசாமி எழுதி இயக்கி உள்ள படம் மொத ராத்திரி. காமெடி ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக நடிக்க நடிகை அன்ஷிமா அனில் குமார் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சேத்தன், ஏ. வெங்கடேஷ், மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமனாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தற்போது போட்டோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மொத ராத்திரி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#ModhaRathiri shooting wrapped up ❤🔥
Release date announcement and other exciting updates coming soon ✨💥#MythriTamil03#KudumbaPadam@MythriOfficial #RajaKaruppasamy @iam_rishikanth #AnishmaAnilkumar @bharathsankar12 pic.twitter.com/EmYRROkusW
— Mythri Movie Makers (@MythriOfficial) July 1, 2026