Athrvaa: அந்த படத்தை நான் ரொம்பவே என்ஜாய் பண்ணி பண்ணேன்.. பார்ட் 2 லீட் கூட இருந்தது – அதர்வா ஓபன் டாக்!
Athrvaa About Gemini Ganeshanum Suruli Raajanum: தமிழில் பிரபல நாயகனாகவும், ரசிகைகள் கொண்டாடும் நடிகராகவும் இருந்துவருபவர் அதர்வா. இவரின் நடிப்பில் இதயம் முரளி என்ற படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. சமீபத்தில் பேசிய அதர்வா, இதுவரை நடித்ததில் ஜாலியாக நடித்த படத்தின் அனுபவம் மற்றும் அதன் பார்ட் 2 யோசனை பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடிகர் அதர்வா (Athrvaa), தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர். இவரின் தந்தை முரளியின் மரணத்திற்கு பின் சினிமாவில், ஹீரோவாக அடியெடுத்து வாய்த்த நிலையில், தற்போதுவரை முன்னணி ஹீரோவாகவும், முக்கியமான வேடங்களிலும் படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பராசக்தி (Parasakthi). இதை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதில் அதர்வா சிவகார்த்திகேயனின் தம்பி வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ள படம்தான் இதயம் முரளி (Idhayam Murali). இதில் அதர்வா ஹீரோவாக நடிக்க, கயாடு லோஹர் (kayadu Lohar) மற்றும் பிரீத்தி முகுந்தன் (Pretiy Mukundhan) இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் புரோமோஷன் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அதர்வா, அவர் என்ஜாய் செய்து நடித்த படம் குறித்து சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி.. ட்ரெயின் படத்தின் டீசர் அப்டேட் இதோ!
தான் மகிழ்ச்சியாக நடித்திருந்த திரைப்படம் குறித்து அதர்வா பேசிய விஷயம்:
அதில் அதர்வா பேசுகையில், “உங்கள் எத்தனை பேருக்கு பிடிக்குமோ பிடிக்காதோ, நான் ஷூட் பண்ணும்போது மிகவும் மகிழ்ச்சியாக என்ஜாய் பண்ணி நடித்த திரைப்படம் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என்ற படம்தான். நான் அண்ட் படத்தின் ஷூட்டிங்கின்போது ரொம்பவே என்ஜாய் பண்ணேன். இதில் என்னவென்றால், அந்த படத்தின் முடித்தபோது பார்ட் 2 படத்திற்கான லீட் வெச்சிருந்தாங்க.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி – சாய் பல்லவி படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடிகளுக்கு விற்பனையா? வைரலாகும் தகவல்
உண்மையை சொல்லப்போனால் அது அப்பவே ஷூட் பண்ணிருக்கவேண்டியது. ஒரு புரோமோ அல்லது ட்ரெய்லருக்காவது ஷூட் பண்ணிருக்கலாம். அண்ட் படம்தான் இதுவரை நடித்ததில் நான் மகிழ்ச்சியாக பண்ண படம்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதயம் முரளி திரைப்படத்தின் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
A ride through the lovely memories, with @dhanushkraja on the mic and @MusicThaman‘s catchy beat ♥️✨#VaamaVaama from #IdhayamMurali out now.
Find your way to love in theatres, on July 10th
Lyrics📝 @tatvaman
A @MusicThaman musical🎵✨
From July… pic.twitter.com/MzfEiXx1YL
— DawnPictures (@DawnPicturesOff) June 16, 2026
இதயம் முரளி படத்தை இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆகாஷ் முரளி உருவாக்கியுள்ளார். இதில் கயாடு லோஹர் மற்றும் பிரீத்தி முகுந்தன் இனைந்து நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் மலையாள நடிகர் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்திலும், இசையமைப்பாளர் தமன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது.